வெளிநாட்டவரின் பேக்குகளைத் திருடி பணத்தை எடுத்துக் கொண்டு... ஆவணங்களை ரிட்டர்ன் செய்த திருடன்
மும்பை: வெளிநாட்டவர்களாக குறி வைத்து திருடி வந்த 61 வயது திருட்டுத் தாத்தாவை மும்பை ரயில்வே போலீசார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள அந்நபரின் பெயர் கிஷோர் சுப்ரமணியன் மட்டாலி(61). வெளிநாட்டில் இருந்து இந்தியா வருபவர்களைக் குறி வைத்து திருடுவது தான் கிஷோரின் வழக்கம். ஆனால், அவ்வாறு திருடுகையில், சம்பந்தப்பட்டவர்களின் பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்கள் அந்தப் பையில் இருந்தால், அவற்றைக் குப்பையில் எறிந்து விட மாட்டார் கிஷோர்.

அதற்குப் பதில் அந்த ஆவணங்களை முறைப்படி உரியவரின் முகவரிக்கு அனுப்பி வைத்து விடுவார். இப்படி ஆவணம் ஒன்றை அனுப்பிய போது தான் மும்பை போலீசில் சிக்கியுள்ளார் கிஷோர்.
சவுதி அரேபியாவில் வாழ்ந்து வரும் தேவிதாசன் என்பவர் தனது கைப்பை திருடு போய் விட்டதாக போலீசில் புகார் அளித்திருந்தார். அதில், பாஸ்போர்ட் உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் இருந்ததாக அவர் தெரிவித்திருந்தார்.
இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். அப்போது தேவிதாசனின் மங்களூர் முகவரிக்கு அவரது பாஸ்போர்ட் தபாலில் வந்தது. அதனைத் தொடர்ந்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில், கிஷோர் சவுதி தூதரகத்தில் விசாரித்து தேவிதாசனின் முகவரியைக் கண்டுபிடித்தது தெரிய வந்தது.
அதனைத் தொடர்ந்து கிஷோரை மும்பை போலீசார் கைது செய்தனர். அப்போது அவரிடமிருந்து மேலும் சில வெளிநாட்டவரின் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது.
மேலும் கிஷோரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவர் பல்வேறு திருட்டுகளில் சம்பந்தப்பட்டிருப்பது தெரியவந்தது. மேலும், தெலுங்கு, மலையாளம், தமிழ், இங்கிலீஷ், ஹிந்தி, கன்னடம் மற்றும் மராத்தி என பல மொழியைத் தெரிந்து வைத்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.
கைது செய்யப்பட்டுள்ள கிஷோர் பி.எஸ்ஸி பட்டதாரி என போலீசார் தெரிவித்துள்ளனர்.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications