50,000 கி.மீ மாநில நெடுஞ்சாலைகள் தேசிய நெடுஞ்சாலையாகின்றன- ரூ.55,000 கோடி ஒதுக்கீடு!
டெல்லி: மத்திய பட்ஜெட்டில் 50,000 கி.மீ மாநில நெடுஞ்சாலைகள் தேசிய நெடுஞ்சாலையாக மாற்றப்படும் எனத் தெரிவித்துள்ள நிதியமைச்சர் அருண் ஜெட்லி, சாலை, நெடுஞ்சாலை திட்டங்களுக்கென ரூ55,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று பொது பட்ஜெட்டைத் தாக்கல் செய்துள்ளார் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி. பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் 3-வது பொது பட்ஜெட்டை இது ஆகும். இதில், விவசாயம், கல்வி, கிராமப்புற மேம்பாடு என பல்வேறு துறைகளுக்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, சாலை மற்றும் நெடுஞ்சாலை திட்டங்களுக்கென இந்தப் பட்ஜெட்டில் ரூ. 55 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.
மேலும், 50,000 கி.மீ மாநில நெடுஞ்சாலைகள் தேசிய நெடுஞ்சாலையாக தரம் உயர்த்தப்படும் என்றும், 2016-ம் ஆண்டுக்குள் 10,000 கி.மீ தேசிய நெடுஞ்சாலை பணிகள் கட்டி முடிக்கப்படும் என உறுதியளிக்கப் பட்டுள்ளது.
இதற்கென நாளொன்றுக்கு 100கி.மீ. சாலைகள் அமைப்பது என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதோடு, 2.23 லட்சம் கி.மீ. முக்கிய சாலைகள் இணைக்கப்படும் என்றும் பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications