69% இடஒதுக்கீடுக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் அவகாசம்
டெல்லி: தாழ்த்தப்பட்டோர், பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு தமிழகத்தில் கல்வியில் 69% இடஒதுக்கீடு எந்த அடிப்படையில் வழங்கப்படுகிறது? என்பதைத் தெளிவுப்படுத்தும் மனுவை 2 வாரங்களுக்குள் தமிழக அரசு தாக்கல் செய்ய அவகாசம் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இதுதொடர்பாக முற்பட்ட பிரிவைச் சேர்ந்த மாணவி ஹர்ஷிணி சார்பில் கடந்த ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட மனுவை நீதிபதிகள் எம்.ஒய்.இக்பால், பினாகி சந்திரகோஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று விசாரித்தது.
அப்போது, ஹர்ஷிணி சார்பில் சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் கே.எம். விஜயன் ஆஜராகி, இந்தியா முழுவதும் கல்வியில் 50% இடஒதுக்கீடு மட்டுமே வழங்கப்பட்டு வரும் நிலையில், தமிழகத்தில் மட்டும் 69% இடஒதுக்கீடு அளிக்கப்பட்டு வருகிறது. இதனால், பொதுப் பிரிவு மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே, தமிழக அரசு கடைப்பிடிக்கும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்று வாதிட்டார்.
அதைக் கேட்ட நீதிபதிகள், தமிழகத்தில் எந்த அடிப்படையில் 69 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது? என்பதை மாநில அரசு விளக்க வேண்டும்' என்று உத்தரவிட்டனர். இதையடுத்து, தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ராகேஷ் திரிவேதி, "69% இடஒதுக்கீடு என்பது அரசின் கொள்கை முடிவாகும். ஒடிசா உள்ளிட்ட சில மாநிலங்களிலும் இதுபோன்ற இடஒதுக்கீடு முறை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. எனவே, அவற்றை ஆராய்ந்து பதிலளிக்க கால அவகாசம் தேவை என்றார்.
அவரது கோரிக்கையை ஏற்ற நீதிபதிகள், கல்வியில் 69% இடஒதுக்கீடு எந்த அடிப்படையில் வழங்கப்படுகிறது என்பது குறித்து தமிழக அரசு 2 வாரத்துக்குள் பதிலளிக்க வேண்டும். அந்த மனுவுக்கு மனுதாரர் தரப்பில் அடுத்த 2 வாரங்களுக்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications