69% இடஒதுக்கீட்டை எதிர்த்து வழக்கு: இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்
டெல்லி: தமிழகத்தில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 69 சதவீத இடஒதுக்கீட்டை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தமிழகத்தில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 69 சதவீத இடஒதுக்கீடு பின்பற்றப்படுகிறது. இந்நிலையில் இந்த இடஒதுக்கீட்டை எதிர்த்து சாகித்யா என்ற மாணவி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அவர் தனது மனுவில் கூறியிருப்பதாவது,
தமிழகத்தில் செயல்படும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 50 சதவீத இடஒதுக்கீடு பின்பற்றப்படாததால் பொதுப் பிரிவு மாணவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். அதனால் தற்போது பின்பற்றப்படும் 69 சதவீத இடஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.
இந்த மனு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிமன்றம் இது குறித்து வரும் 17ம் தேதிக்குள் பதில் அளிக்குமாறு இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications