இந்த ஊர் செட்டாகாது.. இந்தியாவிலிருந்து வரிசையாக வெளியேறும் கோடீஸ்வரர்கள்.. அதிர்ச்சி ரிப்போர்ட்!
இந்தியாவிலிருந்து வெளியேறும் கோடீஸ்வரர்கள் எண்ணிக்கை அதிகம் ஆகி இருப்பதாக ஆய்வு ஒன்று வெளியாகி இருக்கிறது.
சென்னை: இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் பணக்காரர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதனால் இங்கிருந்து வெளிநாட்டில் குடிபெயரும் இந்தியர்களின் எண்ணிக்கையும் அதிகம் ஆகிறது.
இதனால்தான் என்னவோ அமெரிக்கா எச்1-பி விசாவிற்கு நிறைய கட்டுப்பாடுகள் விதிக்க பார்க்கிறது. இந்த நிலையில் வெளிநாட்டிற்கு செல்லும் இந்திய பணக்காரர்கள் குறித்த அதிர்ச்சி ஆய்வு ஒன்று வெளியாகி இருக்கிறது.
ஒவ்வொரு நாட்டில் இருந்தும் எவ்வளவு பணக்காரர்கள் வெளிநாட்டிற்கு செல்கிறார்கள் என்று இந்த ரிப்போர்ட்டில் கூறப்பட்டுள்ளது.

ஏன்
ஒவ்வொரு நாட்டிலும் இருக்கும் பணக்காரர்கள் அந்த நாட்டின் வளம் போதாமல் வெளிநாடு செல்வதாக கூறப்பட்டுள்ளது. மீண்டும் அந்த நாடு பணக்கார நாடாக மாறும் போது அவர்கள் திரும்பி வருவதாக கூறப்படுகிறது. ஆனால் நாட்டின் வளத்தில் பாதிக்கும் மேல் அவர்கள்தான் பயன்படுத்தி இருக்கிறார்கள் என்றும் கூறியுள்ளது.

மீண்டு வருகிறார்கள்
இதில் ஆஸ்திரேலியா நாடு மட்டும் நல்ல நிலையில் இருக்கிறது. அந்த நாட்டை விட்டு வெளியே சென்ற பல பணக்காரர்கள் மீண்டும் அந்த நாட்டிற்கு திரும்பி இருக்கிறார்கள். சென்ற வருடம் மட்டும் 10 ஆயிரம் பணக்காரர்கள் அந்த நாட்டிற்கு மீண்டும் திரும்பியுள்ளனர்.

7000
இந்தியா இதில் மோசமாக இருக்கிறது. இந்தியா 2ம் இடம் பிடித்துள்ளது. சென்ற வருடம் மட்டும் 7000 பணக்காரர்கள் இந்தியாவை விட்டு சென்றுள்ளனர். இதில் 2016ஐ விட 16 சதவிகிதம் அதிகம். இதில் பலரது முக்கிய தேர்வு அமெரிக்காதான் எனப்படுகிறது.

10000 பேர்
இதில் சீனா முதல் இடம் வகிக்கிறது. அந்த நாட்டில் இருந்து கடந்த வருடம் மட்டும் 10000 பேர் வெளியேறி இருக்கிறார்கள். அவர்களும் அதிகமாக அமெரிக்க சென்றுள்ளதாக கூறப்பட்டு உள்ளது. இரண்டு நாடுகளுக்கும் இது பெரிய ஆபத்தாக முடியும் எனப்படுகிறது.
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
பாலைவனத்தில் பங்கர்கள்.. அணு ஆயுதங்களை டபுளாக்கும் சீனா! சாட்டிலைட் படங்களால் வெளிவந்த உண்மை! -
சீனாவில் ஆடு மேய்க்கும் வேலைக்கு மாதம் 1 லட்சம் சம்பளம்! பண்ணையில் திரளும் பட்டதாரிகள்! பின்னணி என்ன -
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications