நேபாள பெண் கற்பழித்து கொலை: 7 பேருக்கு தூக்குத் தண்டனை வழங்கி ஹரியாண நீதிமன்றம் அதிரடி!
சண்டீகர்: ஹரியான மாநிலத்தில் மனநலம் பாதித்த நேபாளப் பெண்ணை கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த கும்பலைச் சேர்ந்த 7 பேருக்கு ரோதக் நீதிமன்றம் தூக்குத் தண்டனை விதித்து தீர்ப்பு அளித்துள்ளது.
நேபாளத்தைச் சேர்ந்த மனநலம் பாதித்த ஒரு பெண் ஹரியாண மாநிலம் ரோக்டெக் நகரில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சைக்காக வந்தார். அவர் கடந்த பிப்ரவரி மாதம் 1-ந் தேதி திடீரென காணாமல் போனார். இதுகுறித்து அந்த பெண்ணின் உறவினர்கள் ரோதக் போலீசில் புகார் செய்தனர்.

ஆனால், 4-ந்தேதி ரோதக் அருகில் உள்ள பாகு அக்பர்பூர் கிராமத்தில் ஒரு வயலில் அந்த பெண்ணின் பிணம் கிடந்தது. விசாரணையில் அது அந்த நேபாள பெண் என்பது தெரியவந்தது. அந்த உடலை போலீசார் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனையில் கொலைக்கு முன்னதாக அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கொடூரமாக கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
பாலியல் சம்பவம் தொடர்பாக ரோதக் நகர் அருகே உள்ள கத்திகேரா கிராமத்தில் பதுங்கி இருந்த 8 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர். இவர்களில் ஒருவர் நேபாள நாட்டைச் சேர்ந்தவர்.
இந்த வழக்கு விசாரணை கடந்த 10 மாதமாக ரோதக் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. நீதிபதி 7 பேருக்கு தூக்குத் தண்டனை விதித்து தீர்ப்பு அளித்தார். அதில் மேலும் ஒருவர் 18 வயதுக்கு குறைவானவர் என்பதால் அவருக்கு சிறார் நீதிமன்றம் விசாரித்து தண்டனை வழங்கும் என்று குறிப்பிட்டார். இந்த வழக்கில் 10 மாதத்தில் விசாரணை முடிந்து தண்டனை வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications