திருப்பதி வனப்பகுதியில் ஆந்திர போலீஸ் மீண்டும் துப்பாக்கி சூடு: செம்மரம் வெட்டிய 7 பேர் கைது!
திருப்பதி: திருப்பதி சேஷாச்சலம் வனப்பகுதியில் செம்மரம் கடத்தியவர்கள் மீது ஆந்திரா போலீசார் மீண்டும் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். செம்மரம் கடத்தியதாக 7 தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடத்தல்காரர்கள் விட்டுச்சென்ற 27 லட்சம் ரூபாய் மதிப்பிலான செம்மரக்கட்டைகளையும் பறிமுதல் செய்த போலீசார் தப்பியோடியவர்களை தேடி வருகின்றனர்.
ஆந்திர மாநிலம் திருப்பதி சேஷாசல வனப்பகுதியில் செம்மரக்கடத்தல் கும்பலின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. செம்மரங்களை வெட்டி கடத்துவதை தடுக்க ஆந்திர அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வந்தாலும் அவர்களால் செம்மரக் கடத்தல் கும்பல் நடமாட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை
கடந்த ஏப்ரல் மாதம் 7ம் தேதி ஆந்திர மாநிலம் திருப்பதி சேஷாசல வனப்பகுதியில் செம்மரங்களை வெட்டி கடத்த முயன்றதாக தமிழகத்தின் வேலூர், திருவண்ணாமலை, சேலம் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 20 தொழிலாளர்களை ஆந்திர போலீசார் சுட்டுக் படுகொலை செய்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், திருப்பதி சேஷாசல வனப்பகுதியில் எர்லகுண்டா என்ற இடத்தில் செம்மரக்கடத்தல் கும்பல் ஒன்று முகாமிட்டு மரங்களை வெட்டுவதாக நள்ளிரவு 12 மணியளவில் செம்மரக்கடத்தல் தடுப்பு சிறப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

செம்மரம் வெட்டிக்கடத்தல்
இதை தொடர்ந்து, சிறப்பு படை போலீசார் எர்லகுண்டா வனப்பகுதிக்குள் அதிரடியாக நுழைந்தனர். அப்போது, அங்கு கடத்தல் கும்பலை சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் செம்மரங்களை வெட்டி கொண்டிருந்தனர். உடனே போலீசாரை அவர்களை சரணடையுமாறு எச்சரித்ததாக தெரிகிறது. ஆனால் சரணடைய மறுத்த அந்த கும்பல், போலீசாரை மீது கற்களை வீசி தாக்கியதாக கூறப்படுகிறது.

துப்பாக்கிச்சூடு
கடத்தல் கும்பல் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து, போலீசார் வானத்தை நோக்கி 3 ரவுண்டு துப்பாக்கியால் சுட்டு எச்சரிக்கை விடுத்திருக்கின்றனர். துப்பாக்கி சூடு நடத்தியதால் கடத்தல் கும்பல் நாலாபுறமும் சிதறி ஓட, போலீசார் அவர்களை துரத்தி பிடித்துள்ளனர். ஆனால், அந்த கும்பலில் இருந்த 7 பேர் மட்டுமே பிடிபட, மற்றவர்கள் தப்பி ஓடி இருக்கின்றனர்.

7 பேர் கைது
இதையடுத்து, 7 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களை பாக்ராபேட்டை வனத்துறை அலுவலகத்திற்கு அழைத்து சென்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், பிடிபட்ட 7 பேரும் தமிழகத்தின் வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று போலீஸ் தரப்பில் கூறப்பட்டு உள்ளது.

செம்மரக்கட்டைகள் பறிமுதல்
செம்மரக்கடத்தல் தடுப்பு பிரிவு டி.ஐ.ஜி. காந்தாராவ் தலைமையிலான அதிகாரிகள் சம்பவ இடத்தில் ஆய்வு நடத்தினர். கடத்தல்காரர்கள் விட்டுச்சென்ற 27 லட்சம் ரூபாய் மதிப்பிலான செம்மரக்கட்டைகளையும் காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
-
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக்












Click it and Unblock the Notifications