"2 டீம்! 7 பயங்கரவாதிகள்.. 3 பக்கத்தில் இருந்தும் அட்டாக்!" காஷ்மீர் தாக்குதல்! என்ன நடந்தது! பகீர்
ஸ்ரீநகர்: காஷ்மீர் மாநிலத்தில் நேற்றைய தினம் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 5 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இதனிடையே இந்தத் தாக்குதல் குறித்து இப்போது சில கூடுதல் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்தியா- பாகிஸ்தான் எல்லையில் தொடர்ந்து பதற்றமான ஒரு சூழலே நிலவி வருகிறது. அங்கே பாகிஸ்தான் எல்லையில் இருந்து, இந்தியப் பகுதிக்குள் ஊடுருவல் முயற்சி நடந்து கொண்டே தான் இருக்கிறது.

இந்தியப் பகுதிகள் ஊடுருவ முயல்வதும் அதை இந்திய ராணுவத்தினர் முறியடிப்பதும் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. இதற்கிடையே நேற்று அங்கு மிக மோசமான ஒரு தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது.
காஷ்மீர்: அங்கே காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் தான் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. அங்கே நமது இந்திய ராணுவ வீரர்கள் வழக்கம் போல ராணுவ வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அவர்கள் பிம்பர் காலி பகுதியில் இருந்து சென்றுகொண்டு இருந்த போது வாகனம் திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. இதில் 5 இந்திய ராணுவ வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். அங்குள்ள பாடா துரியன் நீர்வீழ்ச்சிக்கு அருகே பிற்பகல் 3 மணியளவில் இந்தச் சம்பவம் நடந்தது.
முதலில் இது எதிர்பாராமல் நடந்த விபத்து என்றே கருதப்பட்டது. கடுமையான மழை பெய்து கொண்டிருந்த நிலையில், மின்னல் தாக்கியதில் வாகனம் தீப்பிடித்திருக்கலாம் என்று கருதப்பட்டது. அதன் பின்னரே இது திட்டமிட்டு நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் என்பது உறுதியானது. இந்திய ராணுவத்தினர் வாகனத்தில் அவர்களை 3 பக்கத்திலும் சுற்றி வளைத்துத் தாக்குதல் நடத்தியுள்ளனர்,.

எப்படி நடந்தது: அப்போது பயங்கரவாதிகள் கையெறி குண்டை வீசியதில் வாகனம் தீப்பிடித்து எரிந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதில் ஐந்து பேர் உயிரிழந்த நிலையில், காயமடைந்தவர்கள் ராணுவ மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே இந்த பயங்கரவாத தாக்குதல் குறித்து மேலும் சில தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதனிடையே ஐந்து ராணுவ வீரர்கள் கொடூரமாகக் கொல்லப்பட்ட இந்த பயங்கரவாத தாக்குதலில் இரண்டு குழுக்களைச் சேர்ந்த ஏழு பயங்கரவாதிகள் ஈடுபட்டதாகப் பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த பயங்கரவாதிகள் பாகிஸ்தான் தேசியவாத குழுக்களைச் சேர்ந்தவர்கள் என்றும் கூறப்படுகிறது.
எந்த பயங்கரவாதிகள்: ஜெய்ஷ்-இ-முகமது (JeM) மற்றும் லஷ்கர்-இ-தொய்பா (LeT) உதவியுடன் இயங்கும் உள்ளூர் பயங்கரவாத அமைப்பே இந்தத் தாக்குதலை நடத்தியதாகக் கூறப்படுகிறது. முதலில் ஜெய்ஷ்-இ-முகமது ஆதரவு பயங்கரவாதக் குழுவான மக்கள் பாசிச எதிர்ப்பு முன்னணி (PAFF) இந்தத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்றுக் கொண்டதாகத் தகவல் வெளியானது. அதன் பின்னரே இதில் லஷ்கர் இடி பயங்கரவாதிகள் ஈடுபட்டிருக்கலாம் என்ற பேச்சும் அடிபடுகிறது.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து ரஜோரி மற்றும் பூஞ்ச் வழியாக இந்தியாவுக்குள் பயங்கரவாதிகள் ஊடுருவியதாக வெளியான தகவலைப் புலனாய்வு அமைப்புகள் விசாரித்து வருகின்றன. ஜேஇஎம் மற்றும் லஷ்கர் இடி பயங்கரவாதிகளைப் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ஊடுருவி கிராமங்களில் மறைத்து இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
நேற்றைய தினம் ராணுவ வீரர்கள் வாகனத்தில் வந்து கொண்டிருந்த போது மழை பெய்த நிலையில், அதைப் பயன்படுத்தி வாகனத்தை 3 பக்கங்களும் சூழ்ந்து கொண்ட தாக்குதல் நடத்தியுள்ளனர். அப்போது அவர்களில் சிலர் கையெறி குண்டை வீசியதில் தான் வாகனம் தீப்பற்றியுள்ளது.
-
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications