ரூமில் கர்ப்பிணிகளை.. டாக்டர்கள் செக்கப் செய்யும் காட்சி.. லீக்கான 7 வீடியோ.. இந்த மருத்துவமனையிலா?

Subscribe to Oneindia Tamil

காந்திநகர்: மருத்துவமனை ஒன்றில், மூடப்பட்ட அறைக்குள் கர்ப்பிணிகளை பெண் டாக்டர்கள் பரிசோதிப்பது, நர்ஸ்கள் ஊசி போடுவது, என பல்வேறு வீடியோக்கள் இணையத்தில் கசிந்ததை கண்டு, குஜராத் மக்கள் அதிர்ந்து போய்விட்டனர். என்ன நடந்தது?

குஜராத்தில் ஒரு புகழ்பெற்ற மகப்பேறு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது.. ராஜ்கோட்டின் "பயல்" என்ற பெயரில் செயல்படும் இந்த தனியார் மருத்துவமனை, அந்த பகுதிகளில் மிகவும் பிரபலமான மருத்துவமனையாகும்.. மகப்பேறு மருத்துவமனை என்பதால், பெரும்பாலும் கர்ப்பிணிகள்தான் இங்கு வருகை தருகிறார்கள்.

gujarat 7 videos pregnant women

இந்நிலையில், இந்த மருத்துவமனையின் அறைகளில், கர்ப்பிணிகள் பரிசோதனை செய்யப்படும் பல வீடியோக்கள் யூடியூப் மற்றும் டெலிகிராம் சேனல்களில் அப்லோடு செய்யப்பட்டுள்ளன.. அதிலுள்ள ஒவ்வொரு வீடியோவை கண்டும், பெண்கள் அதிர்ச்சி அடைந்தனர்..

பாதுகாப்பு கேள்விக்குறி

கர்ப்பிணிகளை வழக்கமாக தனி அறையில்தான், டாக்டர்கள் பரிசோதிப்பார்கள்.. அந்தவகையில், மருத்துவமனை அறைகளில், பெண்களை டாக்டர்கள் பரிசோதிக்கும் வீடியோக்களும், நர்ஸ்கள் அவர்களுக்கு தரும் சிகிச்சைகளும், வீடியோவாக வெளியாகியிருக்கிறது.. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், பெண்களின் பாதுகாப்பையும் இது கேள்விக்குறியாக்கி வருகிறது..

டெலிகிராம், யூடியூப் என சமூக வலைதளங்களில் இந்த வீடியோக்கள் வைரலான நிலையில், தற்போது இது தொடர்பாக அகமதாபாத் சைபர் கிரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்..

சர்வர் ஹேக் செய்யப்பட்டுவிட்டதா

மருத்துவமனையின் இயக்குநரிடம் இதுகுறித்து விசாரித்தபோது, "மருத்துவமனையின் சிசிடிவி காட்சிகள் எப்படி வெளியானது என்று தனக்கு தெரியவில்லை .. சிசிடிவி சர்வர் ஹேக் செய்யப்பட்டுவிட்டதாக தெரிகிறது... ஆனாலும், இது எப்படி நடந்தது என்று தெரியவில்லை.. இதுகுறித்து புகார் தரப்போகிறோம்" என்று தெரிவித்திருக்கிறார்.

ராஜ்கோட் சைபர் கிரைம் போலீசார், இதுகுறித்த விசாரணையை உடனடியாக துவங்கியிருக்கிறார்கள்.. அத்துடன், வழக்குப் பதிவு செய்து, மருத்துவர்கள் உட்பட மருத்துவமனை ஊழியர்களையும் விசாரித்து வருகிறார்கள்.

மருத்துவமனை விவகாரம் குறித்து, துணை காவல் ஆணையர் (சைபர் கிரைம்) ஹார்திக் மகாடியாவின் சொல்லும்போது, "குற்றம் சாட்டப்பட்டவர், ஒரு யூடியூப் சேனலுடன் இணைக்கப்பட்ட ஒரு டெலிகிராம் க்ரூப்பை உருவாக்கியிருக்கிறார்.. இந்த மருத்துவமனை வீடியோக்கள் அதில் பதிவேற்றப்பட்டுள்ளன..

கர்ப்பிணிகளுக்கு சிகிச்சை தரும் வீடியோ

அந்தவகையில், மருத்துவமனையின் உள்ளே ஒரு படுக்கையில், மருத்துவர்களால் பெண்கள் பரிசோதிக்கப்படும் 7 வீடியோக்களை யூடியூப் சேனல் இதுவரை அப்லோடு செய்யப்பட்டுள்ளது..

மேலும், சிசிடிவி காட்சிகளில் இருந்து இந்த வீடியோக்கள் எடுக்கப்பட்டதாக தெரிகிறது.. மருத்துவமனையின் மூடிய அறைக்குள் பெண் நோயாளிகளை, ஒரு பெண் மருத்துவர் பரிசோதிப்பது, ஒரு நர்ஸ் கர்ப்பிணிகளுக்கு ஊசி போடுவது என வீடியோக்கள் உள்ளன.. ஒரு வீடியோவில், நர்ஸும், ஒரு பெண் நோயாளியும் குஜராத்தியில் பேசுதையும் கேட்க முடிகிறது..

டெலிகிராம், யூடியூப் சந்தாதாரர்கள்

அந்த சேனலை விளம்பரப்படுத்தும் டெலிகிராம் குழுவில் 90க்கும் மேற்பட்டவர்கள் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். இதுபோன்ற வீடியோக்களை பார்ப்பதற்கு, டெலிகிராம் குழுவின் உறுப்பினர்களிடம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.. சந்தாக்களை செலுத்த வேண்டும் என்பதற்காக, உறுப்பினர்களை ஈர்க்கவே, இதே போன்ற வீடியோக்களின் ஸ்கிரீன் கிராப்கள் ஷேர் செய்யப்பட்டுள்ளன..

கடந்த வருடம் செப்டம்பரில் இந்த டெலிகிராம் குழு தொடங்கப்பட்டுள்ளது.. அந்த யூடியூப் சேனல், இந்த வருடம் ஜனவரியில் தொடங்கப்பட்டுள்ளது.. ராஜ்கோட்டில் உள்ள ஒரு மகப்பேறு மருத்துவமனையின் பிரசவ அறையில் இருந்து இந்த வீடியோக்கள் அப்லோடு செய்யப்பட்டுள்ள.. இதுகுறித்த விசாரணை தீவிரமாக நடந்து வருகிறது" என்றார்.

பெண்களின் தனியுரிமையை மீறும் வகையில், இந்த தனியார் மருத்துவமனையில், மகளிர் மருத்துவ பரிசோதனை மற்றும் மருத்துவ சிகிச்சை பெறுவதைக் காட்டும் சிசிடிவி காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியாகி மிகுந்த பரபரப்பை இன்னமும் ஏற்படுத்தி கொண்டிருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+