7 வயது சிறுமிக்கு பெல்ட் அடி : கொடூர ட்யூஷன் ஆசிரியை தலைமறைவு
பெங்களூரு: ஹோம் வொர்க் செய்யாததாக கூறி பெங்களூருவில் இரண்டாம் வகுப்பு படிக்கும் சிறுமியை ட்யூஷன் ஆசிரியை பெல்ட்டால் அடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இளம் பிஞ்சு மாணவியை பெல்ட்டால் அடித்த கொடூர டீச்சரின் பெயர் லதா என்பதாகும். இவர் பெங்களூரு நிலமங்கலாவில் வசித்து வருகிறார். இரண்டாம் வகுப்பு படிக்கும் சிறுமியை ஹோம் வொர்க் செய்யாததற்காக ட்யூஷன் ஆசிரியை லதா பெல்ட்டால் அடித்து விளாசியுள்ளார்.
பெங்களூரு புறநகர் மாவட்டம் நிலமங்களா டவுன் சுபாஷ் நகரில் வசித்து வருபவர் வெங்கடேஷ். இவருடைய மகள் பாவனா, 7. இவள், அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 2ம் வகுப்பு படித்து வருகிறாள்.
பள்ளி முடிந்தவுடன் பாவனா கூடுதல் பயிற்சிக்காக அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் டியூசனுக்கு சென்று வருகிறாள். நேற்று முன்தினம் பாவனா, வீட்டுப்பாடம் செய்யாமல் டியூசனுக்கு சென்றதாக தெரிகிறது. இதை அறிந்த டியூசன் ஆசிரியை லதா, சிறுமியை கண்டித்துள்ளார். மேலும், அவர் பெல்ட்டால் பாவனாவை அடித்ததாக கூறப்படுகிறது. இதனால், பாவனாவின் உடலில் ரத்த காயங்கள் ஏற்பட்டன.
இதனால் பாவனா, டியூசனில் இருந்து அழுது கொண்டே தனது வீட்டிற்கு திரும்பினாள். மேலும், உடலில் இருந்த காயங்களை காண்பித்து கண்ணீர் மல்க சம்பவம் குறித்து அவள் தனது பெற்றோரிடம் கூறினாள்.
அதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் பாவனாவை அருகே உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தனர். மேலும், பாவனாவின் பெற்றோர் சார்பில் நிலமங்களா போலீசில் டியூசன் ஆசிரியை லதா மீது புகார் செய்யப்பட்டது.
இதுகுறித்து அறிந்த லதா தலைமறைவாகிவிட்டார். சம்பவம் பற்றி நெலமங்களா டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள லதாவை வலைவீசி தேடிவருகிறார்கள். ஆசிரியை லதா மாணவர்களை கடுமையாக தாக்கும் குணம் கொண்டவர் என்பது தெரியவந்துள்ளது.
காவல்துறையினர் நடத்திய விசாரணையில் டியூசனுக்கு வரும் குழந்தைகள் அனைவரையும் லதா அடித்துள்ளார். ஆனால் இந்த முறை மட்டுமே காவல்துறையினருக்கு புகார் வந்துள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications