விமானத்தில் சீட்டை மாற்றி மாற்றி சேட்டை செய்த 70 பயணிகளை கீழே இறக்கிவிட்ட இன்டிகோ
ஹைதராபாத்: ஹைதராபாத்தில் இருந்து ராய்பூருக்கு செல்லவிருந்த இன்டிகோ விமானத்தில் இருக்கைகளை மாற்றிக் கொண்டே இருந்த 70 பேர் கீழே இறக்கிவிடப்பட்டனர். அதன் பிறகு விமானம் ராய்பூருக்கு சென்றது.
இன்டிகோ விமானம் ஒன்று ஹைதராபாத்தில் இருந்து ராய்பூருக்கு நேற்று கிளம்பியது. விமானத்தில் 70 பேர் ஒரே குழுவாக ஏறியுள்ளனர். அவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இருக்கைகளில் அமராமல் இஷ்டப்படி இருக்கைகளை மாற்றி மாற்றி அமர்ந்துள்ளனர்.

ஒதுக்கப்பட்ட இடங்களில் அமருமாறு கூறிய விமான சிப்பந்திகளின் பேச்சை அவர்கள் யாரும் காதில் வாங்கவில்லை. மேலும் ஒரு பயணி தனது பையால் விமான ஊழியரை தாக்க முயன்றுள்ளார்.
இதையடுத்து சிப்பந்திகள் இது குறித்து தரைக்கட்டுப்பாட்டு ஊழியர்களிடம் புகார் தெரிவித்தனர். இருக்கைகளுக்காக சேட்டை செய்த 70 பேரும் கீழே இறக்கிவிடப்பட்டனர். அதன் பிறகு விமானம் கிளம்பிச் சென்றது.
கீழே இறக்கிவிடப்பட்ட பயணிகளோ விமான சிப்பந்திகள் தங்களிடம் தவறாக நடந்து கொண்டதாக விமான நிலைய போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர். மேலும் தங்களின் உடைமைகளுடனேயே விமானம் ராய்பூருக்கு சென்றுவிட்டது என்றும் தெரிவித்துள்ளனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications