72% பலாத்கார வழக்குகளில் குற்றவாளிகள் காதலர்கள்:மும்பை போலீஸ் கமிஷனர்

Subscribe to Oneindia Tamil

72% of rape accused are victims' boyfriends: Mumbai Police Commissioner
மும்பை: சுமார் 72 சதவீத பலாத்கார வழக்குகளில் குற்றவாளிகள் பாதிக்கப்பட்ட பெண்களின் காதலர்களாக உள்ளனர் என்று மும்பை போலீஸ் கமிஷனர் ராகேஷ் மரியா தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

2014ம் ஆண்டில் அக்டோபர் மாதம் 31ம் தேதி வரை மும்பையில் 542 பாலியல் பலாத்கார வழக்குகள் பதிவாகியுள்ளன. இதில் 71.9 சதவீதம் அதாவது 389 வழக்குகளில் குற்றவாளிகள் பாதிக்கப்பட்ட பெண்களின் காதலர்கள். திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி அளித்து பலாத்காரம் செய்துள்ளனர். 6 சதவீத வழக்குகளில் தான் குற்றவாளிகள் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு அறிமுகம் இல்லாதவர்கள்.

மீதமுள்ள வழக்குகளில் குற்றவாளிகள் உறவினர்கள், சகோதரர்களாக உள்ளனர். 2013ம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட 333 பலாத்கார வழக்குகளில் 316 தீர்த்து வைக்கப்பட்டுள்ளன.

பலாத்காரம் தொடர்பாக துணிந்து வந்து புகார் அளிக்குமாறு மக்களை ஊக்குவித்து வருகிறோம். அதனால் பல பெண்கள் பயமில்லாமல் வந்து புகார் தெரிவிக்கிறார்கள். பல பெண்கள் துணிந்து வந்து புகார் தெரிவிப்பதால் பலாத்கார வழக்குகளின் எண்ணிக்கை அதிகரிப்பதாக உங்களுக்கு தெரிகிறது. கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் அக்டோபர் வரை மும்பையில் 1, 832 செயின் பறிப்பு வழக்குகள் பதிவாகின. இந்த எண்ணிக்கை இந்த ஆண்டு 31 சதவீதம் குறைந்து 1, 257 ஆக உள்ளது என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+