மே. வங்கத்தை மிரட்டும் மூதாட்டிகள் பலாத்காரம்.. மேலும் ஒரு பாட்டி பலாத்காரம் செய்து கொலை
கொல்கத்தா : கன்னியாஸ்திரி ஒருவர் மர்மக் கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்ட பரபரப்பு இன்னும் ஓயாத நிலையில், மேற்கு வங்கத்தில் மேலும் ஒரு மூதாட்டி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப் பட்டுள்ளார்.
மேற்கு வங்க மாநிலத்தில் கடந்த சனிக்கிழமை அன்று பள்ளி ஒன்றில் புகுந்த கொள்ளையர்கள், அங்கிருந்த 72 வயது கன்னியாஸ்திரியை பலாத்காரம் செய்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
போர் காலங்களில் கூட நடக்காத கொடூரம் எனக் கூறி, குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்யக் கோரி போராட்டங்கள் நடத்தப் பட்டு வருகின்றன. இது தொடர்பான வழக்கு விசாரணை சி.பி.ஐ.க்கு மாற்றப்படும் என்று மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் மேற்கு வங்க மாநிலத்தில் நேற்று மேலும் ஒரு மூதாட்டி பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பர்த்வானில் ஆசிரமம் ஒன்றில் தங்கி இருந்த அந்த 75 வயது மூதாட்டி, கோவிலுக்குச் சென்று திரும்பிய போது மர்மநபர்களால் பலாத்காரம் செய்யப்பட்டு, கொலை செய்யப் பட்டுள்ளார்.
மூதாட்டியின் உடல் ஆசிரமத்திற்கு அருகிலேயே மீட்கப் பட்டுள்ளது. மூதாட்டியின் உடலைக் கைப்பற்றிய போலீசார், இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவத்தில் இதுவரை போலீசார் 4 பேரை பிடித்து விசாரித்து வருவதாகக் கூறப்படுகிறது.
ஒரு வாரத்திற்குள்ளாகவே அடுத்தடுத்து இரண்டு மூதாட்டிகள் பலாத்காரம் செய்யப்பட்டது மேற்கு வங்கத்தில் மம்தா அரசுக்கு நெருக்கடியை அதிகரிக்க செய்துள்ளது.
-
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
மூத்த திரிணாமுல் தலைவர் மண்டை உடைப்பு.. ரத்தம் கொட்ட கொட்ட பானர்ஜி செய்த சம்பவம்! பரபரப்பு -
சென்னையை அதிரவைத்த மூதாட்டி - சிறுவன் மீதான பாலியல் வன்கொடுமை.. தேசிய மகளிர் ஆணையம் அதிரடி -
மகளிர் நிதி உதவித் திட்டம்.. 30 லட்சம் போலி பயனாளிகள்? மேற்கு வங்க சுவேந்து அதிகாரி உடனடி ஆக்ஷன் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications