9 மாதங்களில் 78 "கேஸ்"... முசாபர்நகரில் சிறுவர்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரிப்பு
முசாபர்நகர்: முசாபர் நகரில் கடந்த 9 மாதங்களில் மட்டும் சுமார் 78 வழக்குகள் சிறுவர்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்பாக பதிவு செய்யப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

சமீபகாலமாக உத்திரப்பிரதேசத்தில் பாலியல் குற்றங்கள் அதிகரித்துள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. இதனை உறுதி செய்யும் வகையில் முசாபர் நகரில் கடந்த ஒன்பது மாதங்களில் சிறுவர்களுக்கெதிரான பாலியல் குற்றங்கள் தொடர்பான வழக்குகள் சுமார் 78 பதிவு செய்யப்பட்டுள்ளது போலீஸ் பதிவு தகவலின் படி வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இவை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 19ம் தேதியில் இருந்து ஆகஸ்ட் 30ம் தேதி வரையில் பதிவு செய்யப்பட்டவை ஆகும். இந்த வழக்குகள் குழந்தைகள் பாதுகாப்பு (POCSO) சட்டம் 2012 மற்றும் பிற குற்ற வழக்குகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், மேற்குறிப்பிட்ட 78 வழக்குகளில் 49 வழக்குகள் பாலியல் பலாத்கார வழக்கு என்பது குறிப்பிடத்தக்கது. மற்றவை பாலியல் தொந்தரவு மற்றும் கடத்தல் தொடர்பானவை என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்குகளை சிறப்பு கோர்ட்டு கூடுதல் மாவட்ட நீதிபதி மன்யாங் சவுகான் விசாரித்து வருகிறார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications