அகமதாபாத் அருகே சொகுசு பேருந்து - டேங்கர் லாரி மோதல்: 8 பேர் பலி - 14 படுகாயம்
அகமதாபாத்: அகமதாபாத் அருகே சொகுசு பேருந்தும், டேங்கர் லாரியும் மோதிக் கொண்ட விபத்தில் 8 பேர் பரிதாபமாகப் பலியானார்கள். காயமடைந்த 14க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.
குஜராத் மாநிலம் அகமதாபாத்திற்கு மும்பையிலிருந்து சென்ற சொகுசுப் பேருந்து இன்ரு அதிகாலை 1.45 மணி அளவில் மும்பை-அகமதாபாத் ஹவேயில் டேங்கர் லாரி மீது மோதிக்கொண்ட விபத்தில் பேருந்து தீப்பிடித்து எரிந்தது. இச்சம்பவத்தி்ல் பேருந்தில் பயணம் செய்த 8 பேர் சம்பவ இடத்திலேயே பலியாயினர்.
பலியானவர்களின் உடல்கள் அடையாளம் தெரியாத அளவிற்கு உருக்குலைந்து காணப்படுவதால், பலியானவர்கள் பற்றிய விவரங்கள் கண்டறிவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. விபத்தில் பலியானவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப் பட்டுள்ளன.
மேலும், விபத்தில் காயமடைந்த 14க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கடந்த வருடம் மே மாதத்தில் 14 பேரை பலி கொண்டு, 40 பேரை படுகாயமேற்படுத்திய விபத்து நடந்த இடத்திற்கு மிக அருகில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications