அலறிய கிராமம்.. 8 உயிர்களை காவு வாங்கிய கிணறு.. தவறி விழுந்த சிறுமியை மீட்டபோது நடந்த துயரம்
கிணறு சுற்றுசுவர் இடிந்து விழுந்ததில் 8 பேர் பலியானார்கள்
போபால்: கிணற்றில் ஒரு சிறுமி தவறி விழுந்துவிட்டாள்.. அந்த குழந்தையை மீட்கும் பணியை பார்வையிட பலர் சென்றுள்ளனர்.. அப்போது எதிர்பாராமல் அங்கிருந்த சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.. இதனால் மத்திய பிரதேச மாநிலமே அதிர்ந்து போயுள்ளது.
Recommended Video
விதிஷா மாவட்டத்தில் இந்த துயர சம்பவம் நடந்துள்ளது.. இங்கு கஞ்ச் பசோதா தாலுகா பகுதியில் நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் ஒரு சிறுமி கிணற்றில் தவறி விழுந்துவிட்டாள்..
அந்த கிணறு 50 அடி ஆழம் கொண்டது.. 20 அடிக்கு தண்ணீரும் இருந்துள்ளது... அந்த கிணறு பயன்பாட்டிலும் இருந்து வருவதாக தெரிகிறது.

பதறிய மக்கள்
இதனால் பதறி போன கிராமத்தினர், அந்த கிணற்றுக்குள் இறங்கி சிறுமியை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இதையடுத்து கிராமமே திரண்டு வந்தது.. இந்த மீட்பு பணியை கிணற்றை சுற்றி நின்று கொண்டு வேடிக்கை பார்த்து கொண்டிருந்தது. அப்போது திடீரென அந்த கிணற்றின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில், நின்றுகொண்டிருந்த கிட்டத்தட்ட 40-க்கும் மேற்பட்டவர்கள் தவறி விழுந்தனர்.

அதிர்ச்சி
இதுகுறித்து உடனடியாக போலீஸாருக்கு தெரிவிக்கப்பட்டது... போலீசாரும் இரவு 11-க்கு டிராக்டர் உதவியுடன் மீட்புப்பணிகளில் ஈடுபட்டனர்.. ஆனால், இதில் கொடுமை என்னவென்றால், அந்த டிராக்டர் வாகனமும் சரிந்து போலீஸாருடன் கிணற்றில் விழுந்தது.. இதற்கு பிறகு, இவர்களை மீட்பு, தேசிய பேரிடர் மீட்பு படையினரும், மாநில பேரிடர் மீட்பு படையினரும் வரவழைக்கப்பட்டனர்..

டிராக்டர்
ஆனால், கிணற்றில் நிறைய தண்ணீர் இருந்ததால் மீட்பு பணியில் சுணக்கம் ஏற்பட்டது.. எனவே, முதல் வேலையாக, கிணற்றில் இருந்த தண்ணீரை வெளியேற்றினர்.. அதற்கு பிறகு முழுவீச்சில் மீட்பு நடவடிக்கையில் இறங்கினர்.. கிணற்றில் டிராக்டருடன் விழுந்த போலீசார் மீட்கப்பட்டனர்... கிராம மக்கள் 19 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.. இவர்கள் அனைவருமே சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சடலம்
எனினும் இந்த சம்பவத்தில் 8 பேரை மீட்க முடியவில்லை.. அவர்களை சடலமாகத்தான் கிணற்றில் இருந்து மீட்டனர்.. இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது... 8 பேரை பறிகொடுத்த உறவினர்களின் மரண ஓலம் கிராமத்தையே உலுக்கி எடுத்து வருகிறது.. இதனிடையே, இத்துயர சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா 5 லட்சம், காயமடைந்தவர்களுக்கு ரூ.50000 நிவாரணம் வழங்கப்படும் என்று அம்மாநில அரசாங்கம் அறிவித்துள்ளது.
-
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு!












Click it and Unblock the Notifications