மேற்கு வங்கத்தில் 8 பேர் தீயிட்டு கொல்லப்பட்ட அதிர்ச்சி சம்பவம்.. சிபிஐக்கு வழக்கை மாற்றிய ஹைகோர்ட்
கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம் பீர்பூம் மாவட்டத்தில் 8 பேர் கொடூரமாக தாக்கப்பட்டு தீயிட்டு எரித்து கொல்லப்பட்ட படுகொலை தொடர்பான வழக்கு விசாரணையை சிபிஐயிடம் ஒப்படைத்து கொல்கத்தா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. முதல்வராக மம்தா பானர்ஜி உள்ளார். இந்நிலையில் மார்ச் 21ல் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பாது ஷேய்க் என்பவர் கொலை செய்யப்பட்டார்.
இதையடுத்து அவரது சொந்த ஊரான பீர்பூம் மாவட்டம் ராம்பூர்ஹாட் அருகே உள்ள போக்டுய் கிராமத்தில் வன்முறை ஏற்பட்டது. சிலர் வீடுகளுக்கு தீவைத்தனர். இதில் 8 பேர் எரித்து கொல்லப்பட்டனர். முன்னதாக இவர்கள் தாக்கப்பட்டதும் தெரியவந்தது. இது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

எதிர்க்கட்சிகள் போராட்டம்
இந்த சம்பவம் குறித்து சிறப்பு விசாரணை குழு விசாரித்து வரும் நிலையில் மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக காங்கிரஸ், பாஜகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். மக்களவை காங்கிரஸ் குழு தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மேற்கு வங்கத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை. இதனால் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியை கலைத்து ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு கடிதம் எழுதியுள்ளார். மேலும் இதுகுறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை எழுந்தது.

மம்தா எச்சரிக்கை
இந்நிலையில் நேற்று முதல்வர் மம்தா பானர்ஜி சம்பவ இடத்துக்கு சென்றார். இறந்தவர்களின் குடும்பத்துக்கு ஆறுதல் கூறினார். மேலும் இழப்பீடு தொகையையும் அவர் அறிவித்தார். அப்போது அவர் கூறுகையில், ‛‛இந்த சம்பவத்தில் கட்சி பாகுபாடு இன்றி நடவடிக்கை எடுக்கப்படும். இதன் பின்னணியில் பெரிய சதிச்செயல் உள்ளதாக நினைக்கிறேன். கொலை செய்தவர்கள் சரணடைய வேண்டும். இல்லாவிட்டால் வேட்டையாடப்படுவார்கள்'' என எச்சரிக்கை விடுத்தார்.

உயர்நீதிமன்றம் விசாரணை
இதற்கிடையே பீர்பூம் சம்பவம் குறித்து கொல்கத்தாவில் உள்ள உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குபதிந்து விசாரைணை துவங்கியது. சாட்சிகள் பாதுகாக்கப்பட வேண்டும், ஆதாரங்கள் அழிக்கப்டுவதை தவிர்க்க சம்பவம் நடந்த பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த உயர்நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டு இருந்தது.

சிபிஐக்கு மாற்றம்
இந்த நிலையில் 8 பேர் தீ வைத்து எரித்து கொல்லப்பட்டது தொடர்பான வழக்கு இன்றும் கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது. தலைமை நீதிபதி பிரகாஷ் ஸ்ரீவத்சவா, நீதிபதிகள் பரத்வாஜ் அமர்வு வழக்கை விசாரித்தது. அப்போது, வழக்கு விசாரணையை சிறப்பு விசாரணை குழுவிடம் இருந்து சிபிஐக்கு மாற்றி நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் விசாரணை அறிக்கையை ஏப்ரல் 7ம் தேதிக்குள் தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த சம்பவம் குறித்து சிபிஐ விசாரணைக்கு மம்தா பானர்ஜி தலைமையிலான அரசு மறுப்பு தெரிவித்து வந்த நிலையில் இன்று கொல்கத்தா உயர்நீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம்












Click it and Unblock the Notifications