ஸ்ரீசைலம் கோவிலுக்கு சென்று திரும்பியபோது சோகம்:சாலை விபத்தில் சென்னையை சேர்ந்த 8 பேர் உயிரிழப்பு!
நெல்லூர்: ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே சாலையின் ஓரம் நின்று கொண்டிருந்த லாரி மீது டெம்போ டிரைலர் மோதியதில் சென்னையை சேர்ந்த 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
கர்னூல் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீசைலம் கோவிலுக்கு ஆன்மிக சுற்றுலா சென்றுவிட்டு திரும்பியபோது இந்த கோர விபத்து நிகழ்ந்துள்ளது.

ஸ்ரீசைலம் கோவிலில் தரிசனம்
சென்னை பெரம்பூரை சேர்ந்த 15-க்கும் மேற்பட்டோர் ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீசைலம் கோவிலுக்கு ஆன்மிக சுற்றுலா சென்றனர். டெம்போ டிரைலர் வாகனம் ஒன்றில் அவர்கள் புறப்பட்டு சென்றனர். பின்னர் ஸ்ரீசைலம் கோவிலில் தரிசனம் செய்துவிட்டு தமிழகத்துக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர்.

லாரி மீது மோதிய டெம்போ டிரைலர்
ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே தாமரமடகு - மும்பை தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தபோது சாலையின் ஓரம் நின்று கொண்டிருந்த லாரி மீது டெம்போ டிரைலர் திடீரென மோதியது. இந்த விபத்து அறிந்ததும் போலீசார் விரைந்து வந்து அப்பகுதியினருடன் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

5 பெண்கள் உள்பட 8 பேர் சாவு
ஆனால் இந்த கோர விபத்தில் 5 பெண்கள் உள்பட 8 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் படுகாயமடைந்த 7 பேரை மீட்டு சிசிச்சைக்காக நெல்லூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிசிக்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விபத்துக்கு காரணம் என்ன?
டெம்போ டிரைலர் வாகனத்தை ஓட்டிய டிரைவர் தூக்க கலக்கத்தில் இருந்ததே விபத்துக்கு காரணம் என்று கூறப்படுகிறது.இந்த விபத்து தொடர்பாக நெல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சாலை விபத்தில் 8 பேர் உயிரிழந்த சம்பவம் சென்னை பெரம்பூர் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications