அமர்நாத் யாத்திரை: இம்முறையும் முதல் ஆளாக உஜ்வல் சர்மா பதிவு... 8 வருடமாக இவரே நம்பர் 1!
ஸ்ரீநகர்: அமர்நாத் யாத்திரை செல்லும் பக்தர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு வரும் நிலையில் இம்முறையும் உஜ்வல் சர்மா என்ற பக்தர் முதலாவதாக பதிவு செய்துள்ளார். இவர் கடந்த 8 ஆண்டுகளாக முதல் ஆளாக அமர்நாத் யாத்திரைக்கு பதிவு செய்து வருகிறார் என்பது சிறப்பம்சமாகும்.

காஷ்மீரில் உள்ள பிரசித்தி பெற்ற அமர்நாத் பனிலிங்கத்தை தரிசனம் செய்வதற்கான புனித யாத்திரை ஜுலை 2ஆம் தேதி தொடங்கி ஆக்டோபர். 29-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள் குறித்து, காஷ்மீர் கவர்னர் எம்.என். வோரா, உயரதிகாரிகளுடன் ராஜ்பவனில் ஆலோசனை நடத்தினார். இதில் அமர்நாத் யாத்திரை வாரியத்தின் தலைமை நிர்வாகி ராகேஷ்குமர் குப்தா, தேசிய பேரிடர் மேலான்மை மீட்பு குழுவைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்டேர் பங்கேற்றனர்.
யாத்திரீகர்களுக்கு தேவையான முன்னேற்பாடுகள் செய்வது, கூடாரங்கள் அமைப்பது,பேரிடர் காலங்களில் ஹெலிகாப்டர்கள் பயன்படுத்துவது, குறித்து விவாதிக்கப்பட்டது.

யாத்ரீகர்கள் பதிவு
அமர்நாத் யாத்திரை செல்ல விரும்பும் பக்தர்களிடம் இருந்து விண்ணப்பங்க பெறும் பணி தொடங்கியுள்ளது. ஜம்முவில் உள்ள தலைமையகத்தில் உஜ்வல்சர்மா என்ற யாத்ரீகர் தனது முதல் விண்ணப்பத்தை அளித்தார். யாத்திரை செல்வதற்கான விண்ணப்பத்தை அளித்த உடன் செய்தியாளர்களிடம் பேசிய உஜ்வல் சர்மா, இது கடவுளின் கிருபை என்று கூறினார்.
இந்த ஆண்டு நாடுமுழுவதும் 87 மையங்கள் மூலம் 2,96,180 விண்ணப்பங்கள் பெற முடிவு செய்யப்பட்டுள்ளதாக தலைமை அதிகாரி அர்விந்த் குப்தா தெரிவித்துள்ளார். ஜம்மு மாநிலத்தில் பக்ஷி நகர், காந்தி நகர், பிலாவர், உத்தம்பூர், பூஞ்ச் உள்ளிட்ட மையங்களில் மாலை 3 மணி முதல் 6 மணிவரை சனிக்கிழமை தவிர வார நாட்களிலும் விண்ணப்பங்கள் பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications