பால்குடி மாறாத குழந்தையின் வாயை பொத்தி பலாத்காரம்... மூச்சுத்திணறி உயிரிழந்த சோகம்
பால்குடி மாறாத குழந்தை என்றும் பாராமல் ஒன்பது மாத குழந்தையை வாயைப் பொத்தி தூக்கிக் கொண்டு போய் பலாத்காரம் செய்து கொடூரமாக கொன்ற கொடூரனை போலீசார் கைது செய்துள்ளனர்.
வாராங்கல்: தெலுங்கானா மாநிலம் வாரங்கல் நகரின் அருகே அனுமஹொண்டாவில் உள்ள ஒரு வீட்டில் மொட்டை மாடியில் படுத்துக்கொண்டிருந்த ஒரு குடும்பத்தில் இருந்த 9 மாத பச்சிளம் குழந்தையின் வாயை பொத்தி எடுத்துக்கொண்டு போய் பலாத்காரம் செய்திருக்கிறான் ஒரு காமுகன். அவனது செயலால் அந்த பச்சிளம் குழந்தை மூச்சுத்திணறி உயிரிழந்துள்ளது.
28 வயதான அந்த கொடியவன் பெயர் பிரவீண் என்பதாகும். ஜெகன் அர்ச்சனா தம்பதியினர் நேற்றிரவு தங்களின் தாபாவின் மாடியில் 9 மாத குழந்தையுடன் உறங்கிக் கொண்டிருந்தனர்.
நள்ளிரவு ஒரு மணிக்கு விழிப்பு வந்து பார்த்த போது பால் பாட்டில் மட்டுமே கிடந்துள்ளது. அருகில் படுத்துக்கிடந்த குழந்தையை காணவில்லை. அதிர்ச்சியடைந்த ஜெகன் தனது மனைவியுடன் சுற்றும் முற்றும் தேடிப் பார்த்தார்.

குழந்தை கடத்தல்
குழந்தையை தூக்கிக்கொண்டு போன பிரவீண் அந்த குழந்தையின் வாயை பொத்தி கடத்திக்கொண்டு போனதால் அது அழக்கூட முடியாமல் திணறியுள்ளது. அருகில் இருந்த ஒரு தெருவில் குழந்தையின் விசும்பல் சத்தம் கேட்டுள்ளது. திணறல் அதிகரிக்கவே அங்கு சென்று பார்த்த பார்த்த போது பிரவீண், அந்த பச்சைக் குழந்தையின் வாயைப் பொத்தி சீரழித்துக்கொண்டிருந்தான்.

மூச்சுத்திணறி மரணம்
ஜெகன் போன போது அந்த குழந்தையை போட்டு விட்டு தப்பி ஓடி விட்டான். பதறியடித்துஓடிய ஜெகன் குழந்தையை மீட்டு அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை இறந்து விட்டதாக கூறினர்.

கைது செய்த போலீஸ்
தப்பி ஓடிய பிரவீணைப் பிடித்து பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து அனுமகொண்டா காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவனை கைது செய்த போலீசார், பலாத்காரம், கொலை ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார்,அந்த கயவனை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.

கடுமையான தண்டனை
பால் குடிப்பதைக்கூட மறக்காத அந்த ஒன்பது மாத குழந்தையை பலாத்காரம் செய்த கொடியவனுக்கு கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும் தூக்கு தண்டனை தரவேண்டும் என்று பொதுமக்கள் கூறியுள்ளனர். குழந்தையின் உடலை பிரேத பரிசோதனை செய்த பின்னரே குழந்தை பலாத்காரம் செய்யப்பட்டுள்ளதா இல்லையா என்று தெரியவரும் என்று போலீசார் கூறியுள்ளனர்.
-
வீட்டில் தனியாக இருந்த 2 பெண்களிடம் அத்துமீற முயன்ற வடமாநில நபர் கொலை.. திருவள்ளூர் அருகே ஷாக்! -
"10 வயது குழந்தையை கொன்னுட்டீயே.." கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளியை தாக்கிய சக கைதிகள்? -
சட்டம் ஒழுங்கு காலி.. எங்கே போனது சிங்கப்பெண் படை? முதல்வர் விஜய் அரசை விளாசிய டிடிவி தினகரன்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி?












Click it and Unblock the Notifications