பல கோடி ரூபாய் கிடைக்கும்.. பணத்திற்காக 9 வயது சிறுவன் நரபலி.. அதிர வைத்த சடங்கு!
கோடிக்கணக்கில் பணம் தேவை என்ற வேண்டுதலுக்காக ஒடிசாவில் 9 வயது சிறுவன் நரபலி கொடுக்கப்பட்டு இருக்கிறான்.
புவனேஷ்வர்: கோடிக்கணக்கில் பணம் தேவை என்ற வேண்டுதலுக்காக ஒடிசாவில் 9 வயது சிறுவன் நரபலி கொடுக்கப்பட்டு இருக்கிறான்.
ஒடிசா மாநிலம் போலாங்கிர் மாவட்டத்தில் உள்ள சுந்திமுந்தா என்று கிராமத்தில் இந்த கொடூர சம்பவம் நடந்து இருக்கிறது. அந்த பகுதியை சேர்ந்த ஞானஷ்யாம் ராணா என்ற 9 வயது சிறுவன்தான் நரபலி கொடுக்கப்பட்டது.
இவன் இந்த மாதம் 13ம் தேதி காணாமல் போய் இருக்கிறான். இதையடுத்து இவனது பெற்றோர் போலீசில் புகார் அளித்து இருக்கிறார்கள். ஆனால் ஒருவாரம் ஆகியும் இவன் கண்டுபிடிக்கப்படவில்லை.
[இந்துக்களை புண்படுத்திவிட்டார்.. கேரள முஸ்லீம் கவுன்சிலிலிருந்து ரெஹானா பாத்திமா அதிரடி நீக்கம்! ]

தலை தனி உடல் தனி
இந்த நிலையில் நேற்று சுந்திமுந்தா அருகே இருக்கும் காட்டுப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளான். காட்டுக்கு அருகே இருக்கும் ஆற்று பகுதி ஒன்றில் தலையில்லாமல் இவன் உடல் மட்டும் கிடைத்து இருக்கிறது. அதன்பின் வேறு ஒரு இடத்தில் தலை தனியாக கிடைத்து இருக்கிறது.

தீவிர விசாரணை
இதையடுத்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். அங்கு நரபலி கொடுக்கப்பட்டதற்கான அடையலாம் காணப்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக அந்த கோணத்தில் விசாரணையை முடுக்கிவிட்டனர். விசாரணையின் முடிவில் அந்த சிறுவனின் தாய் மாமன் மற்றும் சகோதரனை சந்தேகத்தின் பெயரில் கைது செய்தனர்.

நரபலி கொடுத்தனர்
தாய்மாமனும், சகோதரனும், நரபலி கொடுத்து சிறுவனை கொலை செய்ததை போலீஸ் விசாரணையில் ஒப்புக்கொண்டு இருக்கிறார்கள். பல கோடி பணம் கிடைக்க வேண்டும் என்று வேண்டுதலுக்காக இப்படி செய்ததாக கூறியுள்ளனர். வீட்டில் இருந்தவர்களுக்கு தெரியாமல், இவர்கள் இருவர் மட்டும் இந்த நரபலியை செய்துள்ளனர்.

சாமியார்
அவர்கள் நரபலிக்காக பயன்படுத்திய பொருட்கள் கைப்பற்றப்பட்டு இருக்கிறது. நரபலிக்கு உதவி தலைமைறைவாக இருக்கும் சாமியாரை தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் அங்கு பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications