இந்துக்களை புண்படுத்திவிட்டார்.. கேரள முஸ்லீம் கவுன்சிலிலிருந்து ரெஹானா பாத்திமா அதிரடி நீக்கம்!
Recommended Video

திருவனந்தபுரம்: சபரிமலை கோவிலுக்குள் செல்ல முயன்ற ரெஹானா பாத்திமா கேரளா முஸ்லீம் ஜமாத்தில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.
சபரிமலை கோவிலுக்குள் பெண்கள் நுழைவிற்கு எதிராக தொடர்ந்து போராட்டம் நடந்து வருகிறது. எந்த பெண்ணும் கோவிலுக்குள் செல்ல முடியாத வகையில் மக்கள் அங்கு பாதுகாப்பிற்கு நின்று வருகிறார்கள்.
கலவரம் நடப்பதை தடுக்க அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவுகிறது. இந்த நிலையில் ரெஹானா பாத்திமாவின் செய்தி இந்தியா முழுக்க வைரலாகி உள்ளது.

ரெஹானா
கேரளா மாநிலம் கொச்சியைச் சோ்ந்த ரெஹானா பாத்திமா கடந்த வெள்ளிக்கிழமை சபரிமலைக்கு செல்ல முயன்றார். போலீஸ் பாதுகாப்புடன் இவர் இருமுடி கட்டி உள்ளே செல்ல முயன்றார். அவருடன் ஆந்திராவைச் சோ்ந்த பத்திாிகையாளா் கவிதாவும் சென்றார். ஆனால் இவர்கள் உள்ளே அனுமதிக்கப்படவில்லை.

பெரிய சர்ச்சை
காவல் துறையினா் இவர்கள் இருவரையும் பலத்த பாதுகாப்புடன் கோவிலுக்கு அழைத்துச் செல்ல முற்பட்டனா். ஆனால் போராட்டக்காரர்கள் கடுமையாக இதற்கு எதிர்ப்பு தெரிவித்தார்கள். ரெஹானா பாத்திமா ஐயப்ப பக்தை கிடையாது என்று எதிர்ப்பு தெரிவித்தனர். இதன் காரணமாக அவர்கள் கோவிலுக்குள் செல்லாமலே திரும்பி வந்தனர்.

எதிர்ப்பு கிளம்பியது
ரெஹானா பாத்திமா முஸ்லீம் என்பதால் இந்த பிரச்சனை பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது, அவர் ஐயப்ப பக்தை எல்லாம் இல்லை, அவர் போராட்டம் செய்து பெயர் வாங்க வேண்டும் என்று இப்படி செய்கிறார் என்று கூறினார்கள். அதேபோல் இவர் மதம் மாறி இந்துவாகிவிட்டார் என்றும் இன்னொரு பக்கம் விவாதம் செய்யப்பட்டது.

நீக்கினார்கள்
இந்த நிலையில் தற்போது இவர் முஸ்லீம் சமூகத்தில் இருந்து நீக்கப்பட்டு உள்ளார். கேரளா முஸ்லீம் ஜமாஅத் கவுன்சில் இவரை அதிரடியாக நீக்கி உள்ளது. இவரது குடும்ப உறுப்பினர்களையும் நீக்கி உள்ளது. இவர் இந்து மதத்திற்கு களங்கம் விளைவிக்க முயற்சி செய்தார் என்று கூறி இவரை நீக்கி இருக்கிறார்கள்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications