97 வயது கணவனை பிரிந்த 50 வயது மனைவி… கின்னஸ் ரெக்கார்ட் தாத்தாவின் சோகம்!
ஹரியானா: உலகின் அதிக வயதான தந்தை என்று சாதனை படைத்த 97 வயது தாத்தா தற்போது தனது மனைவியைக் காணாமல் தவியாய் தவித்து வருகிறார்.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இந்தியாவை மட்டுமல்லாது உலகையே கலக்கியவர் ராம்ஜித் ராகவ். பஞ்சாபைச் சேர்ந்த இந்த தாத்தா தனது 96-வது வயதில் ஆண் குழந்தைக்கு அப்பா வாகி 'உலகின் அதிக வயது தந்தை' என்ற சாதனை படைத்தவர்.
அதற்கு முன்பே 2010-லேயே ஒரு ஆண் குழந் தைக்கு அப்பாவானவர்தான் தனது சாதனையை தானே முறியடித்தவர்தான் இந்த தாத்தா ராம்ஜித்!

உலக பிரபலம்
இவர் அப்பாவான செய்தியை இந்திய நாளிதழ்கள், டிவிக்கள் மட்டுமல்ல உலகம் முழுவதும் ஊடகங்கள் ஒளிபரப்பு செய்தன. இதனால் உலகப் பிரபலமானார் இந்த தாத்தா.

நேரடி ஒளிபரப்பு வேறு
'பீப்ளி லைவ்' படத்தில் வருவதைப்போல நாட்டின் முக்கிய சேனல்கள், பத்திரிகைகள் அனைத்தும் ஹரியானா வின் ஹர்ஹோடா கிராமத்தை முற்றுகையிட்டன. ராம்ஜித் காலையில் எழுந்து காலைக்கடன் தீர்ப்பது முதல் இரவில் படுக்கப் போவது வரை அவர் லைஃப்ஸ்டைலைப் படம்பிடித்து இந்தியாவின் 'மோஸ்ட் வாண்டட் யூத்' என்றெல்லாம் பில்ட்-அப் ஏற்றி ஒளிபரப்பின.

வெட்கப்பட்ட மனைவி
96 வயது தாத்தாவின் 55 வயதான மனைவி சகுந்தலாவும் வெட்கத்தோடு மீடியாக்கள் முன்னிலையில் நின்று குழந்தையோடு போஸ் கொடுத்தார். எல்லாம் கொஞ்ச நாட்கள்தான். இதோ இப்போது வீட்டில் நான்கு சுவர்களுக்குள் முடங்கிக்கிடக்கிறார் ராம்ஜித்.

மனைவிக்கு நேரமில்லை
பத்திரிகைகள், டி.வி பேட்டிகளில் பிஸியாக இருந்த காரணத்தால் குடும்பத்துக்காக நேரம் ஒதுக்க இயலாமல் போய்விட்டது ராம்ஜித்தால். உடம்புக்கு முடியாமல் போன மனைவி தானாகவே மூத்த குழந்தையோடு மருத்துவமனைக்குச் சென்றிருக்கிறார்.

காணாமல் போன குழந்தை
வீட்டுக்கு வரும் வழியில் களைப்பில் ஒரு மரத்தடியில் படுத்திருக்கிறார். எழுந்து பார்த்தபோது அருகில் மூத்த மகன் பிக்ரம்ஜித்தைக் காணவில்லை. அழுதபடி இரண்டாவது மகன் ரஞ்சித்தைத் தூக்கிக்கொண்டு வீட்டுக்கு வந்திருக்கிறார்.

திட்டிய கணவர்
எப்போதும் அதிகம் அதிர்ந்து பேசாத, மனைவி மீது பெரும் பிரியம் காட்டும் ராம்ஜித் அன்று மகனைத் தொலைத்த மனைவியைக் கண்டபடி திட்டி இருக்கிறார். இதனால் கோபம் கொண்ட சகுந்தலா தன் மகனோடு ராம்ஜித் துக்குத் தெரியாமல் எங்கோ சென்றுவிட்டார்.

காத்திருக்கும் தாத்தா
சகுந்தலாவிற்கு தன்னைவிட்டால் வெளிஉலகமும் தெரியாது என்கிறார் ராம்ஜித். உள்ளூர் மக்கள் போலீஸில் புகார் அளித்து தேடியும் பார்த்து விட்டார்கள். நானும் தேடாத இடம் இல்லை. உடல்நிலை ஒத்துழைக்காததால் தேடுவதை நிறுத்திவிட்டு அவளுக் காக வீட்டில் காத்திருக்கிறேன் என்கிறார்.

திரும்பி வருவாள்
மனைவி இல்லாமல் நடைப்பிணம் போல் இருக்கிறேன். என் மீது அலாதி அன்புள்ள அவள் என் அன்பைப் புரிந்து கொண்டு திரும்பி வருவாள்!'' என்று நம்பிக்கையோடு கூறுகிறார் இந்த 97 வயது தாத்தா. வயதான பின்னர் குழந்தை பெற்றுக் கொண்டு இப்போது மனைவியையும் தொலைத்துவிட்டு அல்லாடும் இந்த தாத்தாவின் சோகம்தான் ஊர்க்காரர்களை வாட்டுகிறது.

ஆளை விடுங்கப்பா
விஷயம் கேள்விப்பட்டு மீண்டும் மீடியாக்களின் படை ராம்ஜித்தை வளைத்து வளைத்து பேட்டி தட்ட முயலவே... '' ஐயோ, ஆளை விடுங்கப்பா என கும்பிட்டு வழியனுப்பிவைக்கிறார்.
நம்ம ஆட்கள் விட்டால் கொலை செய்யப்பட்டு கிடக்கும் சடலத்திடம் கூட பேட்டி எடுக்காமல் விடமாட்டார். பாவம் இந்த தாத்தாவையா விட்டு வைப்பார்கள்.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications