சாவின் விளிம்பை தொட்ட 10 வயது சிறுவன்.. 7 உடல்களுக்கு அடியில் தம்பியை மீட்ட அண்ணன்
புவனேஸ்வர்: ஒடிசா ரயில் விபத்தில் சிக்கி, 7 பேரின் உடல்களுக்கு அடியில் இருந்த 10 வயது சிறுவனை அவரது அண்ணன் காப்பாற்றி உள்ளார். 15 வயதாகும் அந்த சிறுவன், தனது தம்பியை விபத்தில் சிக்கிய ரயில் இடுக்கில் நீண்ட நேரம் தேடி கண்டுபிடித்து காப்பாற்றி உள்ளார்
ஒடிசா மாநிலம் பாலசோர் அருகே பாஹாநாகா பஜார் பகுதியில் கடந்தகோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், கடந்த வெள்ளிக்கிழமைஇரவு சரக்கு ரயில் மீது மோதி தடம் புரண்டது. அந்த நேரத்தில் , பெங்களுரிலிருந்து ஹவுரா நோக்கி வந்த ரயில் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் இதுவரை 288 பேர் பலியாகி உள்ளனர். சுமார் 1000 படுகாயம் அடைந்தனர்.

இந்த விபத்தில் பொதுப்பெட்டியில் பயணித்த பலரும் பலியாகிவிட்டனர். இதேபோல் அதன் அருகில் இருந்த ஏராளமான பெட்டியில் இருந்தவர்களும் உயிரிழந்தனர் ஒடிசா மாநிலம் போக்ராய் கிராமத்தைச் சேர்ந்த தேபேசிஷ் பத்ரா என்ற 10 வயது சிறுவன் ஐந்தாம் வகுப்பு படிக்கிறான்.
தனது தாய், தந்தை, அண்ணனுடன் ரயிலில் கடந்த வெள்ளிக்கிழமை கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்துள்ளார். பத்ராக் பகுதியில் உள்ள மாமா வீட்டுக்கு அவர்கள் சென்று கொண்டிருந்தனர். அப்போதுதான் பாலசோர் அருகே ரயில் விபத்தில் சிக்கியது.
இந்த விபத்தில் இருந்து மீண்டது குறித்து தேபேசிஷ் பத்ரா கூறுகையில், பத்ராக் பக்கத்தில் எங்கள் மாமா வீடு இருக்கிறது. அங்கு செல்வதற்காக கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்றோம். அங்கிருந்து பூரி செல்ல திட்டமிட்டிருந்தோம். கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலில் நான், என் தாய், தந்தை, அண்ணனுடன் சென்றேன். பாலசோர் ரயில் நிலையம் தாண்டியதும் திடீரென ரயில் பெட்டி பயங்கர சத்தத்துடன் குலுங்கியது.
அதன்பிறகு நான் மயக்கம் அடைந்துவிட்டேன். என்ன நடந்தது என்று தெரியவில்லை. கண் திறந்து பார்த்தபோது, பயங்கர வலியில் துடித்தேன். என் மீது இறந்தவர்களின் உடல்கள் கிடந்தன. எனது அண்ணன் சுபாசிஷ்தான் (10-ம் வகுப்பு படிக்கிறான்) என்னை உடல்களின் அடியில் இருந்து மீட்டான்" இவ்வாறு தேபேசிஷ் பத்ரா கூறினார்.












Click it and Unblock the Notifications