Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கழுத்தை அறுத்து.. ஆசிட் ஊற்றி.. நரிக்குறவர் சிறுமியை சீரழித்த ‘தாய் மாமன்’! அதிர்ந்து போன ஆந்திரா!

Subscribe to Oneindia Tamil

அமராவதி : ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்த 13 வயது சிறுமியை பாலியல் தொல்லை செய்ததோடு சிறுமியின் கழுத்தை அறுத்து வாயில் ஆசிட் ஊற்றிய கொடூர சம்பவம் இந்தியா முழுவதும் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது

இந்தியா முழுவதும் கடந்த சில நாட்களாக பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது குறிப்பாக 18 வயதுக்கு உட்பட்ட சிறுமிகள் வன்கொடுமை சம்பவங்களை சிக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.

உத்தரப்பிரதேசம், தெலுங்கானா, ஆந்திரா, ஹரியானா, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் இத்தகைய சம்பவங்கள் அதிகரித்து வருவது சமூக ஆர்வலர்களையும் பெற்றோர்களையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஆந்திராவில் அதிர்ச்சி

ஆந்திராவில் அதிர்ச்சி

பெண்கள் 18 வயதுக்கு உட்பட்ட சிறுமிகள், தலித் குழந்தைகள் பாலியல் சம்பவங்களை துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்படும் நிகழ்வுகள் தான் மேலும் பரபரப்பை கிளப்பியுள்ளது. இந்நிலையில் ஆந்திர மாநிலத்தில் நடைபெற்றுள்ள சம்பவம் இந்தியா முழுவதும் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திரப் பிரதேச மாநிலம் நெல்லூர் மாவட்டத்தின் அருகே உள்ள நெல்லூர் புஜபூஜ நரிக்குறவர் காலனி பகுதியில் 200க்கும் மேற்பட்ட நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்த மக்கள் வசித்து வருகின்றனர்.

 பாலியல் வன்கொடுமை

பாலியல் வன்கொடுமை

அந்தப் பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுமி ஒருவர் அதே பகுதியில் உள்ள ஜில்லா பரிசத் உயர்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் வழக்கம்போல் பள்ளிக்குச் சென்ற சிறுமி மாலையில் வீடு திரும்பினார் அவர்களது பெற்றோர் வெளியே சென்றிருந்த நிலையில் அவர் தனியாக இருப்பதை அறிந்த அந்த சிறுமியின் தாய் மாமன் நாகராஜ் என்பவர் வீட்டிற்கு வந்து சிறுமியிடம் பேச்சு கொடுத்துள்ளார்.

ஆசிட் ஊற்றி கொடூரம்

ஆசிட் ஊற்றி கொடூரம்

சிறிது நேரத்தில் சிறுமியிடம் பாலியல் சீண்டலில் நாகராஜ் ஈடுபட முயன்றதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த மாணவி தனது வீட்டில் இருக்கும் கழிப்பிடத்திற்குச் சென்று கதவை மூட முயற்சித்து இருக்கிறார். இதனால் கோபமடைந்த நாகராஜ் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து சிறுமியின் கழுத்தை அறுத்துள்ளார்.

 அதிரடி கைது

அதிரடி கைது

மேலும் கழிப்பறையில் இருந்த ஆசிட்டை எடுத்து சிறுமியின் வாயிலும் ஊற்றி இருக்கிறார் இதனால் சிறுமி அலறிய நிலையில் அவரது சத்தம் கேட்டு வந்த அருகில் இருந்தோர் சிறுமியை மீட்டு நெல்லூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர் அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் நாகராஜன் கைது செய்துள்ளனர்

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+