BSF வீரரை கடத்தி.. மரத்தில் கட்டிவைத்த வங்கதேசத்தினர்.. வெளியான அதிர்ச்சி வீடியோ
கொல்கத்தா: நம் நாட்டை தொடர்ந்து வங்கதேசம் சீண்டி வருகிறது. இந்நிலையில் மேற்கு வங்க மாநிலம் மால்டா மாவட்டத்தில் எல்லையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்ட எல்லை பாதுகாப்பு படை வீரரை வங்கதேசத்தை சேர்ந்த கிரிமினல்கள் கடத்தி சென்று வாழை மரத்தில் கட்டி வைத்தனர். இதுதொடர்பாக எல்லை பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நம் நாட்டுக்கும், வங்கதேசத்துக்கும் இடையே கடும் மோதல் போக்கு உள்ளது. வங்கதேச இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ் நம் நாட்டை தொடர்ந்து சீண்டி வருகிறார். பாகிஸ்தான், சீனாவுடன் சேர்ந்து கொண்டு நம் நாட்டுக்கு எதிராக சதி திட்டத்தை தீட்டி வருகிறார்.

அதுமட்டுமின்றி வங்கதேசத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நம் நாட்டுக்கு எதிரான நிலைப்பாடுகொண்ட மத அடிப்படைவாதிகளை முகமது யூனுஸ் விடுவித்து வருகிறார். இது நம் நாட்டுக்கு பெரும் அச்சுறுத்தலாக பார்க்கப்படுகிறது. இதனால் எல்லையில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி நம் நாட்டில் சட்டவிரோதமாக தங்கியுள்ள வங்கதேசத்தினரை கண்டுபிடித்து நாடு கடத்தும் நடவடிக்கைகள் தீவிரமாக்கப்பட்டுள்ளன. இதற்கிடையே தான் தற்போது ஒரு பரபரப்பு சம்பவம் நடந்துள்ளது. நம் நாட்டின் எல்லை பாதுகாப்பு படையினரை வங்கதேசத்தினர் கடத்தி சென்றுள்ளனர். இந்த சம்பவம் மேற்கு வங்க மாநிலத்தில் நடந்துள்ளது. மேற்கு வங்க மாநிலத்தில் மால்டா மாவட்டம் இந்தியா - வங்கதேசம் எல்லையில் அமைந்துள்ளது. இருநாடுகளின் சர்வதேச எல்லையில் எல்லை பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர்.
இன்று காலையில் வழக்கம்போல் எல்லை பாதுகாப்பு படையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது கதலியா கிராமத்தில் வங்கதேசத்தை சேர்ந்த சில கிரிமினல்கள் எல்லையை தாண்டி நம் நாட்டுக்குள் நுழைய முயன்றனர். இந்த ஊடுருவலை தடுக்க எல்லை பாதுகாப்புபடை வீரர் முயன்றார். அப்போது கோபமடைந்த கும்பல் எல்லை பாதுகாப்பு படை வீரரை கடத்தியது. எல்லையில் இருந்து வங்கதேசத்துக்குள் கடத்தி சென்று வாழைமரத்தில் கட்டி வைத்துவிட்டு அந்த கும்பல் சென்றது.
இதுபற்றி தகவல் அறிந்தவுடன் எல்லை பாதுகாப்பு படை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்றனர். இதுபற்றி வங்கதேசத்தின் எல்லை காவல் படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வங்கதேச எல்லை காவல் படையினர் தேடுதல் நடத்தி எல்லை பாதுகாப்பு படை வீரரை மீட்டு நம் படையிடம் ஒப்படைத்தனர். கடத்தப்பட்ட எல்லை பாதுகாப்பு படை வீரர் காயம் எதுவும் அடையவில்லை. இருப்பினும் கடத்தலுக்கு பிறகு அவர் 4 மணிநேரம் கழித்து ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இதுபற்றி மூத்த எல்லை பாதுகாப்பு படையின் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‛‛கடத்தப்பட்ட எல்லை பாதுகாப்பு படை வீரர் சில மணிநேரங்களில் மீட்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக வங்கதேசத்தின் எல்லை காவல் படையிடம் தெரிவிக்கப்பட்டது. தற்போது நம் எல்லை காவல் படை வீரர் நலமாக இருக்கிறார்'' என்றார். இந்த சம்பவம் குறித்து எல்லை பாதுகாப்பு படையினர் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். அதுமட்டுமின்றி எல்லையில் கண்காணிப்பை தீவிரமாக்கி உள்ளனர்..
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications