புனேவில் ஹோட்டலுக்குள் வேகமாக சென்று விபத்து ஏற்படுத்திய கார்.. அதிர்ச்சி வீடியோ!

புனேவில் பொதுமக்கள் அதிகமாக நடமாடும் சாலையில் உள்ள ஹோட்டலுக்குள் கார் ஒன்று வேகமாக சென்று மோதி விபத்து ஏற்படுத்தியுள்ளது.

Subscribe to Oneindia Tamil

புனே: புனேவில் பொதுமக்கள் அதிகமாக நடமாடும் சாலையில் உள்ள ஹோட்டலுக்குள் கார் ஒன்று வேகமாக சென்று மோதி விபத்து ஏற்படுத்தியுள்ளது. இது வீடியோவாக வெளியாகி உள்ளது.

புனேவின் சங்வி பகுதியில் உள்ள 'ஃபேமஸ் சவுக்'' என்ற ஹோட்டலில் இந்த சம்பவம் நடந்துள்ளது. ஹோட்டலில் நிறைய பேர் சாப்பிட்டுக் கொண்டு இருக்கும் மதிய நேரத்தில் அந்த வெள்ளை நிற கார் வந்து வேகமாக மோதியுள்ளது. இது சிசிடிவி கேமராவில் பதிவாகி இருக்கிறது.

A car crashed into a famous hotel in Pune - Video

மொத்தம் இரண்டு சிசிடிவி கேமரா பதிவுகள் வெளியாகி இருக்கிறது. கார் வேகமாக கண்ணாடியை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று உள்ளது. உள்ளே இருந்த மக்கள் மீது மோதி, பின் நின்றது. இது வீடியோவாக வெளியாகி உள்ளது.

இந்த மோசமான சம்பவத்தில் ஒருவர் பலியாகியுள்ளார். மூன்று பேர் மோசமாக காயம் அடைந்து இருக்கிறார்கள். இவர்கள் தற்போது புனே அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

போலீஸ் அந்த ஓட்டுநர் மீது வழக்கு பதிவு செய்துள்ளது. அந்த ஓட்டுநர் எவ்வளவு முயன்றும் வண்டியை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முடியவில்லை என்று கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+