வகுப்பறையில் ஆசிரியர் கேட்ட சின்ன கேள்வி.. கோபத்தில் தலையிலேயே குத்திக்கொன்ற 11ம் வகுப்பு மாணவன்
கவுகாத்தி: அஸ்ஸாம் மாநிலத்தில் சீருடை அணியாமல் வந்ததை கண்டித்ததால் வகுப்பறையில் ஆசிரியரை மாணவர் ஒருவர் குத்திக்கொன்றுள்ளார். இந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஆசிரியர்களை மாணவர்கள் தாக்கும் சம்பவங்கள் ஆங்காங்க நடந்து கொண்டே இருக்கின்றன. தங்களுக்கு கல்வி கற்பிக்கும் ஆசிரியரை விரோதிகளாக பார்க்கும் போக்கு அதிகரித்து வருகிறது. கண்டிப்பு காட்டும் ஆசிரியர்கள் மீது கோபத்தில் இருக்கும் மாணவர்கள் சிலர் தாக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது. சில நேரங்களில் ஆசிரியர்களை மாணவர்கள் கொலை செய்யும் நிகழ்வும் நடக்கிறது.

சிறு சங்கடடங்களை கூட தாங்கி கொள்ள முடியாமல் வளரும் குழந்தைகள், தோல்விகளை பக்குவமாக கையாளத்தெரியாத குழந்தைகள், நினைத்ததை அடைய தவறான வழிக்கு செல்கிறார்கள். மிகவும் செல்லமாக வளர்க்கப்படும் குழந்தைகளே பின்னாளில் மிகவும் மோசமான நிலையை அடைகிறார்கள். தங்களுக்கு எதிராக யார் பேசினாலும், செயல்பட்டாலும் ஆத்திரத்தில் எல்லை மீறுகிறார்கள்.. அப்படித்தான் ஒரு சம்பவம் அஸ்ஸாமில் நடந்துள்ளது.
அஸ்ஸாமின் சிவசாகர் மாவட்டத்தில் உள்ள லட்சுமி நகர் பகுதியில் இயங்கும் சாய் விகாஷ் அகடாமி பள்ளியில் சம்பத்தன்று வழக்கம் போல வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. அங்கு 11-ம் வகுப்பில் படிக்கும் மாணவர் ஒருவர் சீருடை அணியாமல் சாதாரண உடையில் பள்ளிக்கு வந்திருக்கிறார்.. என்னப்பா, சீருடை அணியாமல் பள்ளிக்கு வந்தது ஏன் கேட்டு அவரது வகுப்பாசிரியர் (அறிவியல் ஆசிரியர்) ராஜேஷ் பாபு பிஜ்வாடா அவரை கண்டித்தார். அத்துடன் வகுப்பில் இருந்து வெளியே தயவு செய்து செல்லுமாறு பணிவாகவே ஆசிரியர் ராஜேஷ் கூறியிருக்கிறார். ஆனால் மாணவர் அங்கேயே நின்றார். இதனால் கோபமடைந்த ஆசிரியர் ராஜேஷ் சத்தமாக அவரை வெளியே போ என்று கூறினார்.
இதனால் கோபத்தின் உச்சிக்கே சென்ற அந்த மாணவர், தான் உடலில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து திடீரென ஆசிரியரின் தலையில் சரமாரியாக குத்தினார். இதில் படுகாயமடைந்த ஆசிரியர் ராஜேஷ் பாபு பிஜ்வாடா வகுப்பறையிலேயே ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார். இதைப்பார்த்து பிற மாணவர்கள் அலறியடித்து ஓடினார்கள்.
பின்னர் அந்த ஆசிரியரை சக ஆசிரியர்களும், மாணவர்களும் சேர்ந்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் அஸ்ஸாம் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஆசிரியரை கத்தியால் குத்தி கொன்ற மாணவனை கைது செய்தனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications