பீர் குடிக்க வந்த நல்ல பாம்பு.. கேனுக்குள் தலை மாட்டிக்கொண்ட பரிதாபம்.. குடிகாரர்கள் அட்டூழியம்
Recommended Video
புவனேஸ்வர்: குடித்துவிட்டு போடும் பிளாஸ்டிக் பாலித்தீன்கள் மட்டுமல்ல, குடித்துவிட்டு போடும் பீர் பாட்டில்களும் வன உயிரினங்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு உதாரணம் ஆகும்.
நமது ஊர் பகுதிகளில் வனப்பகுதியில் தண்ணீர் ஓடுகிறது என்றால் ஒரு குவிட்டர் மற்றும் பீர் பாட்டில்களுடன் குடித்து கும்மாளம் போட இளைஞர் பட்டாளம் கிளம்பும். குடிக்க குளிக்க என்று இவர்கள் ஜாலியாக இருந்துவிட்டு அப்படியே கொண்டுபோகும் பாலிதீன் கப்புகள் மற்றும் பாட்டில்களை அங்கேயே வீசி சென்றுவிடுவார்கள்.
இப்படி தினசரி வீசிச் செல்லும் பாட்டில்களும், பாலித்தீன் கப்புகளும் மலைப்போல் கிடக்கின்றன. நம்மூர் மலைப்பகுதிகளில்.. மலைப்பகுதி என்று அல்ல.. காட்டுப் பகுதிகளிலும் குடிகாரர்களின் அட்டகாசம் அதிகரித்து வருகிறது.

உயிரை பற்றி கவலையில்லை
இவை அந்த பகுதிகளில் உள்ள வனஉயிரினங்களை எவ்வளவு மோசமாக பாதிக்கிறது என்பதை சிறிது கவலைப்படுவதில்லை. அவர்களின் உடல் நலம் குறித்தே அக்கறைப்படாதவர்கள், விலங்குகளின் உயிர்கள் பற்றியா கவலைப்பட போகிறார்கள்.

ஒடிசாவில் குடிகார கும்பல்
சரி விஷயத்துக்கு வந்திடுவோம்.. இப்படி ஆதங்கப்பட காரணம் ஒடிசாவில் நடந்த ஒரு சம்பவம் தான். ஒடிசாவின் மயூர்பான்ஜி அருகே பரிபடா வனப்பகுதியில் நேற்று குடித்துவிட்ட சென்ற ஒரு கும்பல் பீர் கேனை அங்கேயே வீசி சென்று இருக்கிறது,
|
பீர் பாட்டிலில் மாட்டிய தலை
இது என்ன புதுவாசனை என்று விறுவிறுவென ஊர்ந்து வந்த நல்ல பாம்பு நேராக பீர் கேனுக்குள் தலையை விட்டுருக்கிறது. ஆனால் உள்ளே சென்ற தலையை நல்ல பாம்பால் வெளியே எடுக்க முடியவில்லை. திணறியபடி உயிருக்கு போராடிக்கொண்டு இருந்தது.

வனத்தில் விடுவிப்பு
இதை கண்ட அந்த பகுதியைச் சேர்ந்த உள்ளூர்வாசிகள் பத்திரமாக பாம்பை பீர் கேனில் இருந்து விடுவித்து அடர்ந்த வனப்பகுதியில் கொண்டுபோய் விடுவித்தனர். இந்த புகைப்படங்கள் இணைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications