'ஓசி’ ரேஷன் வாங்குற.. பாஜகவுக்கு ஓட்டுப் போட முடியாதா? உ.பி.யில் தலித் இளைஞர் மீது கொடூர தாக்குதல்!
லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஆளும் பாஜகவுக்கு வாக்களித்த மறுத்ததால் தலித் இளைஞர் ஒருவர் கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இத் தாக்குதலுக்கு மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
18-வது லோக்சபா தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. தற்போது வரை மொத்தம் 4 கட்ட தேர்தல் முடிவடைந்துவிட்டது. ஜூன் 1-ந் தேதி வரை எஞ்சிய 3 கட்ட தேர்தல் நடைபெற உள்ளது.

இந்த நிலையில் உத்தரப்பிரதேசத்தில் பாஜகவுக்கு வாக்களிக்காத தலித் இளைஞர் மீது ஊர்க்காவல் படை போலீசார் கொடூரமாக தாக்குதல் நடத்தி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உ.பி. பரேலி தொகுதியின் பஹோரங்காலா என்ற கிராமத்தைச் சேர்ந்த வீரேந்தர் குமார் இலவச ரேஷன் வாங்குவதற்காக சென்றிருக்கிறார். அந்த கிடங்கு முன்பு பணியில் இருந்த ஊர்க்காவல் படையினர் 2 பேர், வீரேந்திர குமாருடன் லோக்சபா தேர்தல் குறித்து பேசி இருக்கின்றனர். அப்போது வீரேந்திர குமார் தாம் பாஜகவுக்கு வாக்களிக்கவில்லை என கூறியிருக்கிறார். இதனால் ஓசி ரேஷன் வாங்க தெரியுது.. பாஜகவுக்கு ஓட்டுப் போடத் தெரியாதா? என சொல்லியபடி வீரேந்திர குமாரை 2 ஊர்க்காவல் படையினர் கடுமையாகவும் தாக்கி இருக்கின்றனர். தலித் இளைஞர் வீரேந்திர குமார் கொடூரமாக தாக்கப்படும் வீடியோ பதிவுகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த வீடியோவைப் பகிர்ந்துள்ள மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, நீங்கள் பார்த்துக் கொண்டிருப்பது ஒவ்வொரு நாளும் நடக்கும். இந்த சம்பவம் வேதனையை ஏற்படுத்தி இருக்கிறது என தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தமது எக்ஸ் பக்கத்தில், நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் உணவு உரிமை உண்டு. இதனால் இலவச ரேஷன் வழங்கப்படுகிறது. மக்களிடம் இருந்து பெறப்படும் மக்களுக்காக செலவிடப்படுவதுதான் இலவச ரேஷன் என்பது. அப்படியான நிலையில் இவ்வளவு கொடூரமாக எப்படித் தாக்குதல் நடத்த தைரியம் வந்தது? என கேள்வி எழுப்பி இருக்கிறார்.
-
அண்ணாமலை தொடங்கும் புதிய கட்சி.. இணையும் பிரபல பிஸ்னஸ் மேன், திமுக மாஜி அமைச்சர்? அவங்களா? -
என் குழந்தையின் முக ஜாடையை தப்பா பேசுறாங்க! முக்தார், சூர்யா சிவா மீது அலிஷா அப்துல்லா புகார் -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
அமித் ஷாவுக்கே அடங்காத அண்ணாமலை! சைலண்டாய் டெல்லியில் பார்த்த வேலை! ஆர்வக்கோளாறில் ஆதரவாளர்கள்! -
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
அண்ணாமலை விலகுகிறாரா இல்லையா.. நாளை உடையும் மர்மம்.. டெல்லியில் நாளுக்கு நாள் உச்சம்பெறும் டிராமா! -
மோடியை சந்தித்த அண்ணாமலை? மீண்டும் தமிழக பாஜக தலைவராக்க டெல்லி தலைமை திட்டம்? -
மோடியை சந்தித்த அண்ணாமலை! புது கட்சியா? பாஜகவில் புதிய பொறுப்பா? நாளை தெரிந்துவிடும் -
பாஜகவில் இருந்து விலகினாரா அண்ணாமலை? அப்படி எதுவும் தகவல் இல்லையே!முழு பூசணிக்காயை மறைத்த நயினார்! -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்?












Click it and Unblock the Notifications