வறண்டு கிடக்கும் உ.பி... தண்ணீர் திருடியதாக விவசாயி கைது
லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் விவசாயத்திற்காக தண்ணீர் திருடியதாக விவசாயி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலம் பண்டல்காண்ட் பகுதியில் கடந்த மூன்று ஆண்டுகளாக மழை இல்லாததால், கடும் வறட்சி நிலவி வருகிறது. விவசாயம் உள்ளிட்ட தொழில்களுக்கும், குடிப்பதற்கும் தண்ணீர் இல்லாமல் மக்கள் தவித்து வருகின்றனர்.

இந்நிலையில், அங்குள்ள உர்மில் அணையில் விவசாயி ஹிராலால் யாதவ் (55) என்பவர் தண்ணீர் திருடியதாக போலீசாருக்கு புகார் வந்தது. அணையின் அடைப்பு பகுதியை சேதப்படுத்தி, சிறிய கால்வாய் வெட்டி அதன்மூலம் தனது வயலுக்கு ஹிராலால் யாதவ் தண்ணீர் கொண்டு சென்றுள்ளார் என குற்றம் சாட்டப்பட்டது.
இது தொடர்பாக மகோபா ஜால் சன்ஸ்தான் என்ற பொறியாளர் போலீசில் புகார் அளித்தார். அதனைத் தொடர்ந்து, பொதுச்சொத்தை சேதப்படுத்தியதாக ஹிராலால் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரைக் கைது செய்தனர்.
ஆனால், இந்தக் குற்றச்சாட்டை ஹிராலாலின் குடும்பத்தார் மறுத்துள்ளனர். ஏற்கனவே, உர்மில் அணையின் 'வால்வு' பகுதி சேதம் அடைந்து இருந்ததாகவும், ஆனால் அரசு தனது குறைபாடுகளை மறைப்பதற்காக வேண்டுமென்றே ஹிராலால் மீது குற்றம் சாட்டியுள்ளது என்றும் அவரது குடும்பத்தார் தெரிவித்துள்ளனர்.
ஆனபோதும், தண்ணீர் திருடியதாக விவசாயி ஒருவர் கைது செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications