ம.பி.யில் கொடுமை! மாடு வாங்க காசு இல்லை... மகள்களை ஏர் பூட்டி உழவு செய்த தந்தை!!
மாடு வாங்க காசு இல்லாததால், மாடுகளுக்கு பதில் தனது மகள்களை ஏரில் பூட்டி விவசாயி ஒருவர் உழவு செய்தது நெகிழ வைத்தது.
போபால்: பொருளாதார நெருக்கடி காரணமாக மாடுகளுக்கு பதில் தனது மகள்களை ஏரில் பூட்டி விவசாயி ஒருவர் உழவு செய்த சம்பவம் நெஞ்சை உலுக்கியது.
நாட்டின் முதுகெலும்பு என்று காந்தியடிகளால் போற்றப்பட்ட விவசாயிகளின் நிலை தற்போது மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. பருவ மழை பொய்த்து விட்டதாலும், விவசாய பொருள்களுக்கு உரிய விலை கிடைக்காததாலும் விவசாயிகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அரசும் எவ்வித உதவியும் செய்ய முன்வராததால் ஏக்கர் கணக்கில் நிலம் வைத்துள்ள விவசாயிகளும் வறுமையின் பிடியில் சிக்கி தவித்து வருகின்றனர். இதனால் பயிர்கள் வாடுவதாலும், கடனை செலுத்த முடியாததாலும் நாடு முழுவதும் விவசாயிகள் தற்கொலை நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.

தொடர் நெருக்கடி
இந்த நிலையில் தங்கள் வாழ்வாதாரத்தை காப்பாற்றிக் கொள்ள விவசாயிகள் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றனர். எனினும் மத்திய பிரதேச மாநிலத்தில் விவசாயிகள் தொடர் பொருளாதார நெருக்கடியில் சிக்கி வருகின்றனர்.

காசு இல்லை
இதன் காரணமாக மாடு வாங்க காசு இல்லாததால் மகள்களை ஏர் பூட்டி விவசாயி ஒருவர் உழவு செய்த சம்பவம் பார்ப்போரை நெகிழ வைத்துள்ளது.இது குறித்து அந்த விவசாயி சர்தார் பரேலா கூறுகையில்,மாடுகள் வாங்க போதிய பண வசதி இல்லை.
Recommended Video

|
படிப்பு நிறுத்தம்
மக்காச்சோளம் பயிரிடுவதற்கு உழவு செய்ய வேண்டியுள்ளது. வசதியில்லாததால் எனது மகள்கள் எட்டாவது வகுப்புடன் படிப்பை நிறுத்திவிட்டனர் என்றார்.

அரசு தயார்
ஆனால் இந்த விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலர் ஆஷிஷ் சர்மா, சிறுவர்களை இது போன்ற உழவு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தக் கூடாது என்று அறிவுறுத்தியுள்ளதாகவும், எந்த உதவி வேண்டுமானாலும் செய்ய தயாராக உள்ளதாகவும் கூறினார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications