பெற்ற குழந்தைகளை வெறி பிடித்து தாக்கும் தந்தை.. ராஜஸ்தானில் அதிர்ச்சி.. வைரலாகும் வீடியோ
ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் பெற்ற குழந்தைகளை தந்தை கொடூரமாக தாக்கும் பகீர் வீடியோ வெளியாகியுள்ளது.
குழந்தைகள் மீது பெற்றோரே கொடூரத் தாக்குதல் நடத்தும் காட்சிகள் அண்மைக் காலமாக அதிகளவில் வெளியாகி வருகின்றன.
இந்த வீடியோக்கள் அடிப்படையில் குழந்தைகள் மீது கொலை வெறித் தாக்குதல் நடத்துபவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் ராஜஸ்தானில் தந்தை ஒருவர் தனது 2 குழந்தைகளையும் சரமாரியாக தாக்கும் கொலை வெறி வீடியோ வைரலாகியுள்ளது.

இரண்டு குழந்தைகள்
ராஜஸ்தான் மாநிலம் ராஜாசமாத்தைச் சேர்ந்தவர் ஜெயின் சிங். இவருக்கு 5 வயதில் ஒரு மகனும், 3 வயதில் ஒரு மகளும் உள்ளனர்.

மகனை தொங்கவிட்ட தந்தை
இந்நிலையில் தனது 2 குழந்தைகளையும் ஜெயின் சிங் சரமாரியாக அடித்து துன்புறுத்தும் வீடியோ வெளியாகியுள்ளது.
அந்த வீடியோவில் தனது 5 வயது மகனை கயிற்றில் கட்டி தொங்கவிட்டுள்ளார் ஜெயின் சிங்.

அங்கும் இங்குமாக தவிப்பு
மேலும் தனது 3 வயது மகளையும் ஜெயின் சிங் ஒரு குச்சியை வைத்துக்கொண்டு கொடூரமாக அடிக்கிறார். வலி தாங்க முடியாமல் அந்த குழந்தை அங்கும் இங்குமாக தவித்து ஓடுகிறது.

துடிக்கும் குழந்தை
இதனைக் கண்டு கொஞ்சமும் மனம் இறங்காத ஜெயின் அந்த குழந்தையை தூக்கிப்போட்டு அடிக்கிறார். இதில் வலி தாங்க முடியாமல் அந்த குழந்தை துடிக்கிறது.

கயிறில் தொங்கவிடப்பட்ட மகன்
இதைத்தொடர்ந்து கயிறில் கட்டி தொங்கவிட்டுள்ள தனது மகனையும் அந்த தந்தை அடிக்கிறார். வலிதாங்க முடியாமல் இரண்டு குழந்தைகளும் கதறி அழுகின்றனர்.

கைது செய்த போலீஸ்
குழந்தைகளை ஜெயின் சிங் தாக்குவதை அவரது சகோதரர் வீடியோ எடுத்துள்ளார். இந்த வீடியோவின் அடிப்படையில் ஜெயின் சிங் மற்றும் அவரது சகோதரை போலீசார் கைது செய்தனர்.

ஆடை அழுக்கானதால்
இது குறித்து நடத்திய விசாரணையில் குழந்தைகள் மண்ணில் விளையாடி ஆடை முழுவதும் அசுத்தம் ஆக்கியதால் அடித்ததாக ஜெயின் சிங் கூறினார். இந்த கொடூர சம்பவத்தை குழந்தையின் தாய் உட்பட அனைவரும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர்.

அதிர்ச்சி சம்பவம்
ஜெயின் மீதுள்ள அச்சத்தால் யாரும் அவரை தடுக்கவில்லை என கூறப்படுகிறது. ஜெயின் சிங் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். குழந்தைகளை இரக்கமின்றி தந்தையே தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications