கார் ரேஸ்: நானா, நீயா?- டெல்லியில் 'தல' டோணியுடன் மோதிய கோஹ்லி
டெல்லி: கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இரவு நேரத்தில் டெல்லியில் கிரிக்கெட் வீரர்கள் டோணியும், கோஹ்லியும் கார் பந்தயத்தில் பங்கேற்றுள்ளனர்.
இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோஹ்லிக்கு கார்கள் அதிலும் அதிவேகத்தில் செல்லும் கார்கள் என்றால் மிகவும் பிடிக்கும். இதை அவரே பலமுறை தெரிவித்துள்ளார். இந்நிலையில் அவர் டெல்லியில் டோணியுடன் கார் பந்தயத்தில் ஈடுபட்டதை அவர் கூறியுள்ளார்.
கார் பந்தயம் குறித்து கோஹ்லி செய்தியாளர்களிடம் கூறுகையில்,

கார்கள்
எனக்கு கார் ஓட்டுவது என்றால் மிகவும் பிடிக்கும். அதிலும் மிகவும் வேகமாக செல்வது பிடிக்கும். கார்கள் மீது கொள்ளைப் பிரியம். டெல்லியில் டோணியுடன் ரேஸ் வைத்த சம்பவம் நினைவுக்கு வருகிறது.

மைக்கேல் ஜாக்சன்
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு டெல்லியில் பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சனுக்கு அஞ்சலி செலத்தும் வகையில் சினிமா காட்சி நடத்தப்பட்டது. அதற்கு நான், டோணி, ரெய்னா உள்ளிட்டோர் சென்றோம்.

பந்தயம்
மைக்கேல் ஜாக்சன் நிகழ்ச்சிக்கு யார் முதலில் செல்கிறார்கள் என்று நானும், டோணியும் பந்தயம் வைத்தோம். ஒரு காரில் நானும், மற்றொரு காரில் டோணியும், ரெய்னாவும் கிளம்பினோம். அந்த அனுபவத்தை மறக்கவே முடியாது.

இரவு
டெல்லியில் பகல் நேரத்தில் போக்குவரத்து நெரிசல் இருக்கும் என்பதால் இரவு நேரத்தில் காரில் வேகமாக செல்வேன். அதன் மூலம் வேகமாக கார் ஓட்டும் என் தாகத்தை தீர்த்துக் கொள்கிறேன்.












Click it and Unblock the Notifications