ப்பா! யூ டியூபில் மாதம் ரூ.7 லட்சம் வருமானம்! ரூ.45 லட்சத்திற்கு வீடு வாங்கி அசத்திய 15 வயது சிறுமி
மணிலா: 15 வயதே ஆன சிறுமி ஒருவர் யூ டியூப் வருமானம் மூலம் பல லட்சம் ரூபாய்களை வருமானமாக ஈட்டியது கவனத்தை ஈர்த்து உள்ளது.
கொரோனா காலத்தில் உலகம் முழுக்க பலர் பொருளாதார ரீதியாக கடுமையாக கஷ்டப்பட்டனர். அதிலும் பலர் வேலையை இழந்து, பண ரீதியாக கடுமையாக கஷ்டப்பட்டனர்.
ஆனால் இதே சமயத்தில் பலர் அதை நல்ல வாய்ப்பாக பயன்படுத்திக்கொண்டு வீட்டில் இருந்தபடியே பல்வேறு தொழில்களை செய்தனர். வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் வழியாக பல தொழில்களை மேற்கொண்டனர்.
முக்கியமாக இந்த காலகட்டத்தில் இணையத்தில் பல்வேறு புதிய யூ டியூப் சேனல்கள் உருவாகின.
என்ன டக்குனு மாறிட்டாரு.. திமுக அரசுக்கு 'சப்போர்ட்’.. யூ-டர்ன் போட்ட கார்த்தி சிதம்பரம்!'

சிறுமி
அந்த வகையில் சிறுமி ஒருவர் உருவாக்கிய சேனல்தான் பொருளாதார ரீதியாக அவரின் வாழ்க்கையையே மாற்றி உள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த லவ் மேரி சபாஷ் புகழ் என்று சிறுமிதான் இந்த சாதனைக்கு சொந்தக்காரர். இவர் கொரோனா காலத்தில் யூ டியூப் சேனலை தொடங்கி உள்ளார். அதில் விடுகதைகள் சொல்வது, குழந்தைகளுக்கான அனிமேஷன் வீடியோக்களை உருவாக்குவது என்று பல வீடியோக்களை வெளியிட்டு வந்துள்ளார். வீடியோவில் தோன்றி பல விடுகதைகளை சொல்லி விளையாடி இருக்கிறார்.

என்ன சேனல்
குழந்தைகள் பலர் இவரின் வீடியோக்களை அதிக அளவில் பார்க்க தொடங்கி உள்ளனர். 2 வருடமாக விடாமல் இவர் வீடியோக்களை போட்டு வந்துள்ளார். இதில் அவருக்கு மாத வருமானம் 7.6 லட்சம் ரூபாய் வரை உயர்ந்து உள்ளது. முதலில் இவருக்கு 20 ஆயிரம் 30 ஆயிரம் வரை மட்டுமே வருமானம் வந்துள்ளது. ஆனால் போக போக இவருக்கான வருமானம் 7 லட்சத்தை தாண்டி உள்ளது. பொதுவாக குழந்தைகள் வீடியோக்களை குழந்தைகள் மீண்டும் மீண்டும் பார்ப்பார்கள்.

வீடியோ
ஒரே வீடியோவை குழந்தைகள் எத்தனை முறை வேண்டுமானாலும் மீண்டும் மீண்டும் பார்ப்பார்கள். இதன் காரணமாக லவ் மேரிக்கு வருமானம் அதிகரித்து உள்ளது. இவர்களின் வீடு கொரோனா காலத்தில் வறுமையில் மூழ்கி உள்ளது. லவ் மேரி வெளியிட்ட வீடியோக்கள் காரணமாக அவருக்கான வருமானம் அதிகரித்து உள்ளது. இதை வைத்து பல லட்சம் ரூபாய் கடன்களை லவ் மேரி குடும்பம் அடைத்து உள்ளது. அதோடு இந்த பணத்தை இவர்கள் சேர்த்தும் வைத்துள்ளனர்.

வீடு
இந்த நிலையில்தான் அந்த பணத்தை வைத்து 45 லட்சம் ரூபாய்க்கு இவர்கள் வீடு ஒன்றை வாங்கி உள்ளனர். இரண்டு மாடி கொண்ட வீட்டை அவர்கள் வாங்கி உள்ளனர். இதில் 2 மாடி, 5 படுக்கை அறைகள், 4 பாத் ரூம், ஒரு பெரிய ஹால், ஒரு பெரிய கிட்சன் என்று பிரம்மாண்டமாக உள்ள வீட்டை வாங்கி உள்ளனர். இது அத்தனையும் அந்த சிறுமியின் வருமானத்தில் வந்த பணம் ஆகும். அந்த சிறுமியின் யூ டியூப் வருமானம் மூலமே அவர்களின் குடும்பத்தின் அத்தியாவசிய தேவைகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்படுவதாகவும் கூறப்படுகிறது. யூ டியூப் மூலம் வருமானத்தை அள்ளும் அந்த சிறுமிக்கு வயது 15தான் என்பது குறிப்பிடத்தக்கது.
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications