Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

என்ன டக்குனு மாறிட்டாரு.. திமுக அரசுக்கு ‘சப்போர்ட்’.. யூ-டர்ன் போட்ட கார்த்தி சிதம்பரம்!

Subscribe to Oneindia Tamil

சிவகங்கை : டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை, திமுக அரசின் திட்டங்களை தொடங்கி வைக்க அழைப்பதில் தவறில்லை என காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

மேலும், எதிர்க்கட்சியாக இருந்த கட்சி, ஆளுங்கட்சியாக மாறும்போது அவர்களின் நிலைப்பாடு மாறுவது எல்லாக் கட்சிகளிலும் நடக்கும் விஷயம் தான் என்றும் சப்போர்ட் செய்துள்ளார் கார்த்தி சிதம்பரம்.

சமீபகாலமாக, கார்த்தி சிதம்பரம், பல்வேறு விஷயங்களில் திமுகவிற்கு எதிராக ட்வீட் செய்து வந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதற்கு திமுகவினர் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்து வந்த நிலையில், தற்போது, திமுக அரசின் முயற்சிகளில் தவறில்லை என வரவேற்றுள்ளார் கார்த்தி சிதம்பரம்.

 முதல்வர் ஸ்டாலின்

முதல்வர் ஸ்டாலின்

காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தியின் நடைபயணத்தை தொடங்கி வைக்கச் செல்லும் முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தி பங்கேற்கும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க மாட்டார் எனக் கூறப்படுகிறது. அதே நேரம், நாளை சென்னையில் நடைபெறும் அரசு நிகழ்ச்சியில், திமுக அரசின் புதிய திட்டங்களை தொடங்கி வைக்க இருக்கிறார் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால். இது காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் நெருடலை ஏற்படுத்தியுள்ளது.

 தவறு இல்லை

தவறு இல்லை

இந்நிலையில் இது பற்றி பேசியுள்ள காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம், "காங்கிரஸுக்கு எதிரான கட்சியான ஆம் ஆத்மி தலைவரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவாலை, தி.மு.க அரசின் திட்டங்களை தொடங்கி வைக்க அழைப்பதில் தவறில்லை. இருமாநில முதல்வர்களும் இருதரப்பு திட்டங்களை அறிந்து செயல்படுத்துவார்கள். காங்கிரஸுக்கு எதிரான முதல்வர்களுடன் தொடர்பு கொள்ளக் கூடாது என்றால், முதல்வர் ஸ்டாலின் இந்தியாவில் எந்த மாநிலத்திலும் தொடர்பு கொள்ள முடியாது.

அரசியலாக்க வேண்டாம்

அரசியலாக்க வேண்டாம்

டெல்லி முதல்வரும், தமிழக முதல்வரும் இணைக்கமாக இருப்பது ராஜாங்க உறவுதான். இதை வரவேற்கிறேன். இதை அரசியலாக்க வேண்டாம். ராகுல் காந்தி பாத யாத்திரையில், கூட்டணிக் கட்சி தலைவரும், தமிழக முதல்வருமான முக ஸ்டாலின் கலந்து கொள்ள மாட்டார் என நிலவும் கருத்து பற்றி எனக்குத் தெரியாது." எனத் தெரிவித்துள்ளார்.

ஆளுங்கட்சியும் இல்லை, எதிர்க்கட்சியும் இல்லை

ஆளுங்கட்சியும் இல்லை, எதிர்க்கட்சியும் இல்லை

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே அனுமந்தக்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. இந்த முகாமிற்கு காங்கிரஸ் எம்.எல்.ஏ மாங்குடி முன்னிலை வகித்தார். கார்த்தி சிதம்பரம் எம்.பி முகாமை தொடங்கி வைத்தார். அப்போது பேசிய கார்த்தி சிதம்பரம், "தேசிய அரசியலில் காங்கிரஸ் ஆளும்கட்சியாகவோ அல்லது எதிர்க்கட்சியாகவோ இருக்கும். ஆனால், தமிழகத்தில் ஆளும்கட்சி கூட்டணியில் இருந்தாலும், முழுமையான எதிர்க்கட்சியாக இல்லை. அதனால் அதற்கு ஏற்ப நாங்கள் செயல்படுகிறோம்.

 அதிமுக தான் எதிர்க்கட்சி

அதிமுக தான் எதிர்க்கட்சி

அதிமுகதான் தற்போதும் எதிர்க்கட்சி. அக்கட்சியை குறைத்து மதிப்பிட முடியாது. கிராமங்கள்தோறும் கிளைகள் பரப்பி இருக்கும் பெரிய கட்சி. அவர்களுக்குள் உள்ள போட்டியால் மக்கள் பிரச்சனை குறித்து பேசாமல் இருக்கலாம். பாஜகவுக்கு இந்திய அளவில் 35 சதவீத வாக்குகள்தான் உள்ளன. ஊடகங்களுக்கு விளம்பரங்கள் கொடுப்பதால், பாஜகவை பெரிதாக காட்டுகின்றனர். எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் பொறுப்பு காங்கிரஸுக்கு உள்ளது.

ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்

ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்

குலாம் நபி ஆசாத் கட்சியில் இருந்து சென்றது பாதிப்புதான். கட்சியில் இருந்து யார் சென்றாலும் அது பாதிப்பு தான். அவர்கள் வெளியே போகாமல் பார்த்துக்கொள்வது நிர்வாகிகளின் பொறுப்பு. காங்கிரஸ் கடைக்கோடித் தொண்டன், ராகுல் காந்தி தலைவராக வேண்டும் என்று நினைக்கிறான். அவரோ, அவரது குடும்பத்திலோ யார் தலைவராக வந்தாலும் தொண்டர்கள் ஏற்பார்கள். பெரும்பாலான கட்சிகளில் ஒரு குடும் பத்தைச் சுற்றித்தான் அரசியலே நடக்கிறது. தமிழகத்தில் திமுகவில் கருணாநிதி குடும்பம், பாமகவில் ராமதாஸ் குடும்பம் போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம்.

திமுக நிலைப்பாடு

திமுக நிலைப்பாடு

எதிர்க்கட்சியாக இருக்கும்போது ஒரு நிலைப்பாடு, ஆளும்கட்சியாக மாறியதும் ஒரு நிலைப்பாடு எடுப்பது எல்லாக் கட்சிகளிலும் உள்ளது. திமுகவும் அந்த நிலையில் தான் உள்ளது. மக்கள் ஒப்புதலோடு, உரிய இழப்பீடு வழங்கி, எட்டுவழிச் சாலை, விமான நிலையத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்." எனத் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+