விஜய் ராஜினாமா.. அரசிதழில் வெளியீடு.. நன்றியே சொல்லாமல் காலியானது திருச்சி கிழக்கு தொகுதி
சென்னை: வாக்காளர்களுக்கு முதல்வர் விஜய் இன்னும் நன்றி கூட தெரிவிக்காத நிலையில், அவர் வெற்றி பெற்றிருந்த திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதி காலியானதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்த ஜோசப் விஜய், திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்திருந்தார்.
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில், தவெக தலைவர் விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டார். இரு தொகுதிகளில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளர்களை வீழ்த்தி வெற்றி பெற்று தற்போது தமிழக முதல்வராகப் பதவியேற்றுள்ளார் ஜோசப் விஜய்.

இந்த நிலையில், ஏதேனும் ஒரு தொகுதியில் மட்டுமே சட்டமன்ற உறுப்பினராக இருக்க முடியும் என்ற நிலையில், தற்போது திருச்சி கிழக்கு தொகுதியின் எம்.எல்.ஏ பதவியை முதல்வர் விஜய் ராஜினாமா செய்துள்ளார். இது தொடர்பான கடிதத்தை அமைச்சர்கள் செங்கோட்டையன் மற்றும் வெங்கடரமணன் ஆகியோர் தலைமைச் செயலகத்தில் உள்ள அதிகாரிகளிடம் வழங்கினர்.
இந்நிலையில், திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதி காலியானதாக அரசிதழில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்த ஜோசப் விஜய், திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்திருந்த நிலையில், திருச்சி கிழக்கு தொகுதியில் விரைவில் இடைத்தேர்தல் அறிவிக்கப்படும்.
பொதுவாக, ஒரு தொகுதி காலியாக அறிவிக்கப்பட்டால் அடுத்த ஆறு மாதங்களுக்குள் இடைத்தேர்தல் நடத்த வேண்டும். அதன்படி, வரும் நவம்பர் மாதத்திற்குள் திருச்சி கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் நடத்த வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.
விஜய், 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்று முதலமைச்சராகப் பொறுப்பேற்ற நிலையில், இன்னும் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கக்கூட தொகுதிக்குச் செல்லவில்லை. அதற்குள் விஜய் வெற்றி பெற்ற திருச்சி தொகுதி காலியாகியுள்ளது.

திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தவெக சார்பாக முன்னாள் அமைச்சர் கு.ப கிருஷ்ணன் அந்த தொகுதியில் போட்டியிடுவதாகக் கூறப்படுகிறது. இந்த சட்டமன்றத் தேர்தலில் ஏற்கெனவே தவெக சார்பாக திருச்சி மாவட்டம் லால்குடி தொகுதியில் கு.ப.கிருஷ்ணன் போட்டியிட்டு தோல்வி அடைந்துள்ள நிலையில் திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிட மீண்டும் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
நிலத்தை உடனே கைப்பற்ற வேண்டும்.. விஜய் வெளியிட்ட புது உத்தரவு.. 15 திட்டங்கள் 'Waiting'! -
ராஜ்ய சபா தேர்தல்.. காய் நகர்த்தும் காங்கிரஸ்.. கிரிஷ் சோடங்கர் சொன்ன முக்கிய பாய்ண்ட்! -
விஜய்யை பார்க்க வேண்டாம்.. ஸ்டாலினை கைவிட்டு இருக்க கூடாது.. ராகுலிடம் எகிறிய ப்ரியங்கா காந்தி! -
டிடிவி தினகரன் பார்வை படாதா என பம்மியது மறந்து போச்சா? அமைச்சர் CTR நிர்மல்குமாருக்கு அமமுக பதிலடி -
முடிவுக்கு வந்த 9 மாத காத்திருப்பு.. தமிழக புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் இன்று பொறுப்பேற்பு! -
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித்












Click it and Unblock the Notifications