மாற்று அரசியைலை கொண்டு வந்த விஜய்.. இதையும் மாற்றுவாரா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில், அமைச்சரவை உறுப்பினர்களின் பணி முறை குறித்து முக்கியமான விவாதங்கள் எழுந்துள்ளன.

உலகப் பொருளாதாரம் வேகமாக மாறி வரும் இந்தக் காலகட்டத்தில், தமிழக அரசின் அமைச்சர்கள் தனித்தனியாகச் செயல்படாமல், இணைந்து ஒருங்கிணைந்து செயல்பட மாற்று நிர்வாக முறையை விஜய் தலைமையிலான கட்சி கொண்டு வர வேண்டும் என்று தொழிற்துறையினரும், நெட்டிசன்களும் வலியுறுத்தி வருகின்றனர்.

Vijay TVK Government Tamil Nadu Politics Cabinet Ministers Economic Growth Vijay government Tamil Nadu TVK governance model Tamil Nadu cabinet news Vijay political strategy Tamil Nadu economic growth integrated governance model Tamil Nadu ministers coordination Vijay administration Tamil Nadu development plan TVK latest news Tamil Nadu industry growth Vijay cabinet allocation Tamil Nadu policy changes coordinated ministry system Tamil Nadu future economy

புதிய அணுகுமுறை தேவை

உலகப் பொருளாதாரம் பல மாற்றங்களைச் சந்தித்து வரும் நிலையில், தமிழக வெற்றிக் கழக அரசு அமைச்சர்களின் செயல்பாட்டில் புதிய மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. தமிழ்நாடு அரசில் இதுவரையில் அமைச்சகங்கள் தனித்தனி துறைகளாகச் செயல்படும் பழைய முறையை விட்டு, ஒன்றுக்கொன்று தொடர்புடைய துறைகளை இணைத்து செயல்படும் வழிமுறையை பின்பற்றினால் மட்டுமே மாநிலத்தின் வளர்ச்சி வேகம் அதிகரிக்கும் என கருத்து நிலவுகிறது. இந்த அணுகுமுறை தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு வலுவான அடித்தளம் அமைக்கும் என்று அவர்கள் நம்புகின்றனர்.

இணைப்பு அவசியம்

தொழில் துறை மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியை நேரடியாகப் தொடர்புடைய முக்கியத் துறையாகும். எனவே, தொழில் துறை அமைச்சர் தொழிலாளர் துறை மற்றும் சுற்றுச்சூழல் துறையுடன் நெருக்கமான ஒருங்கிணைப்பை ஏற்படுத்தி செயல்பட வேண்டும்.

தொழில் துறையில் எடுக்கப்படும் முடிவுகள் தொழிலாளர்களின் நலன் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புடன் இணைந்திருக்கும்போதுதான் நீண்டகால வளர்ச்சி பாதைக்கான அடித்தளம் சிறப்பாக அமைக்க முடியும். இந்த இணைப்பு மூலம் முதலீடுகள் அதிகரிக்கவும், வேலைவாய்ப்புகள் உருவாகவும் வழிவகுக்கும்.

சுகாதாரம் துறை

சுகாதாரத் துறை மக்களின் வாழ்க்கைத் தரத்தை நேரடியாக மேம்படுத்தும் துறையாகும். இந்தத் துறையும் தொழிலாளர் மற்றும் சுற்றுச்சூழல் துறைகளுடன் இணைந்து செயல்பட வேண்டும் என்று பொதுமக்கள் கோருகின்றனர்.

அதேபோல், கல்வித் துறை எதிர்கால தலைமுறையை வடிவமைக்கும் பொறுப்பை ஏற்றுள்ளது. இந்தத் துறைகள் அனைத்தும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை என்பதால், தனித்தனியாகச் செயல்படாமல் ஒருங்கிணைந்து செயல்படும்போது தான் சிறந்த முடிவுகளை எடுக்க முடியும். இப்படி கல்வி துறை, போக்குவரத்து துறை முதல் அனைத்தும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.

தமிழக வெற்றிக் கழக அரசு இந்த முக்கிய துறைகளுக்கு சரியான நபர்களைத் தேர்வு செய்யும் போது, துறைகளுக்கிடையேயான இணைப்பையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்று தொழிற்துறையினர் எதிர்பார்க்கின்றனர். இந்த அணுகுமுறை தமிழ்நாட்டை பொருளாதார வல்லரசாக மாற்றும் வலுவான அடித்தளத்தை அமைக்கும்.

மக்கள் நலன் மற்றும் மாநில வளர்ச்சி இரண்டையும் உறுதி செய்யும் வகையில் அமைச்சரவை செயல்படுமானால், தமிழ்நாட்டின் எதிர்காலம் பிரகாசமாக இருக்கும் என்று அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

மக்கள் மத்தியில் நடக்கும் இப்புதிய விவாதங்கள் தமிழக அரசியலில் புதிய சிந்தனை தேவை என்பதையும், தமிழ்நாடு வேகமாக வளர்ச்சி அடைய வேண்டும் என்ற இலக்குடன் இருப்பதை காட்டுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+