தமிழகத்தில் 10 ஐபிஎஸ் அதிகாரிகள் டிரான்ஸ்ஃபர்! உளவுத் துறை டூ சைபர் கிரைம் டிஜிபியான பால நாகதேவி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் 10 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதில் உளவுத் துறை டிஜிபியாக இருந்த பாலநாகதேவி, சைபர் கிரைம் டிஜிபியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழக முதல்வராக விஜய் பதவியேற்றது முதல் ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டு வருகிறார்கள். அந்த வகையில் முதல்வரின் தனிச் செயலாளராக செந்தில் குமாரும் செயலாளர் -2 ஆக லட்சுமி பிரியாவும் செயலாளர் 3 ஆக அண்ணா துரையும், கூடுதல் செயலாளராக விஷ்ணுவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

balanagadevi

அது போல் நிதித் துறை செயலாளராக இருந்த உதயசந்திரன், காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார், அவருக்கு பதிலாக சித்திக் ஐஏஎஸ் நிதித் துறை செயலாளராக நியமிக்கப்பட்டார்.

மேலும் நேற்றைய தினம் மீண்டும் ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர். அதில் காத்திருப்போர் பட்டியலில் இருந்த உதயசந்திரனுக்கு தொழில் முதலீட்டு கழகத்தின் நிர்வாக இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அந்த வகையில் தற்போது ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் நடந்துள்ளது. அதில் உளவுத் துறை டிஜிபியாக இருந்த பாலநாகதேவி ஐபிஎஸ், சைபர் கிரைம் டிஜிபியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

பாதுகாப்பு உளவுப் பிரிவு டிஐஜியாக தர்மராஜன் ஐபிஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் வேலூர் சரக டிஐஜியாக இருந்தார். சென்னை மாநகர டிஐஜியாக இருந்த பகர்ல செபாஸ் கல்யாண், உளவுத் துறையின் internal security டிஐஜியாக நியமிக்கப்படுகிறார்.

நெல்லை சரக டிஐஜியாக இருந்த பி.சரவணன் ஐபிஎஸ், சிஐடி உளவுத் துறையின் டிஐஜியாக மாற்றப்பட்டுள்ளார். அது போல் திருவாரூர் எஸ்பியாக இருந்த கராட் கருண் உத்தரவ்ராவ், குற்றவியல் உளவுத் துறை எஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

தென்காசி எஸ்பியாக இருந்த மயில்வாகனன், சிறப்பு பிரிவு சிஐடியின் எஸ்பியாக மாற்றப்பட்டுள்ளார். தூத்துக்குடி எஸ்பியாக இருந்த மதன், பாதுகாப்பு பிரிவு சிஐடியின் எஸ்பியாக மாற்றப்பட்டுள்ளார்.

கியூ பிரிவு எஸ்பியாக இருந்த சண்முகம், சென்னை சிறப்பு பிரிவு சிஐடியின் எஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார். அுத போல் மெட்ரோ மண்டல எஸ்பியாக இருந்த மாதவன், பாதுகாப்பு பிரிவு எஸ்பியாகவும், சட்டம் ஒழுங்கு எஸ்பியாக இருந்த சிலம்பரசந், சிறப்பு பிரிவு எஸ்பியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+