அந்தரங்க வீடியோவை வெளியிடுவதாக மிரட்டிய காதலன்.. தூக்கில் தொங்கிய டெல்லி பல்கலைக்கழக மாணவி!
அந்தரங்க வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக காதலன் மிரட்டியதால் விரக்தியடைந்த டெல்லி பல்கலைக்கழக மாணவி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
டெல்லி: அந்தரங்க வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக காதலன் மிரட்டியதால் விரக்தியடைந்த டெல்லி பல்கலைக்கழக மாணவி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப் பிரதேசத்தை சேர்ந்த மாணவி ஒருவர் டெல்லி பல்கலைக்கழகத்தில் பிகாம் படித்து வந்தார். அவர் டெல்லி ரூப் நகரில் வீடு எடுத்து தங்கியிருந்தார்.
அவருக்கு தன்னுடன் படிக்கும் சக மாணவனான பீகாரைச் சேர்ந்த வெட் பிரகாஷுடன் காதல் இருந்ததாக தெரிகிறது. இந்நிலையில் கடந்த திங்கள் கிழமை இரவு அவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

3 ஆண்டுகளாக காதல்
அவரது உடலைக் கைப்பற்றிய போலீசார் வீட்டில் இருந்த கடிதத்தையும் கைப்பற்றினர். அதில் வெட் பிரகாஷும் அந்த மாணவியும் 3 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருமணம் செய்து கொள்ளும் முடிவில் இருந்த அவர்கள் அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். ஆனால் அவர்களின் காதலை குடும்பத்தார் ஏற்கவில்லை.

விலகிய காதலன்
இதையடுத்து பெற்றோரை விட்டு வருமாறு வெட் பிரகாஷ் அந்த மாணவியை வற்புறுத்தி வந்துள்ளார். இதற்கு அந்த மாணவி மறுப்பு தெரிவிக்கவும் பீகார் சென்ற அந்த வெட் பிரகாஷ் மாணவியிடம் பேசாமல் விலகியுள்ளார்.

வீடியோவை வெளியிடுவதாக மிரட்டல்
அந்த மாணவி திருமணம் செய்துகொள்ளுமாறு என வெட் பிரகாஷை தொடர்ந்து வற்புறுத்தியுள்ளார். திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றால் படிப்பையும் பெற்றோரையும் விட்டுவிட்டு பீகாருக்கு வரவேண்டும் இல்லையெனில் நம் அந்தரங்க வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டுவேன் என மிரட்டியுள்ளார்.

பீகார் விரைந்த போலீசார்
இதனால் மனமுடைந்த அந்த மாணவி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் பிரகாஷை கைது செய்ய பீகார் விரைந்துள்ளனர். இதனிடையே கடந்த 8ஆம் தேதி அந்த மாணவி தன்னை பாலியல் பலாத்காரம் செய்யததாக புகார் அளித்துள்ளார். இதுதொடர்பாகவும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications