ராஜஸ்தான் சிறுமிக்கு முன்ஜென்ம நினைவு... அதிசயப்படும் பெற்றோர்

Subscribe to Oneindia Tamil

ராஜஸ்தானில் ஒரு சிறுமிக்கு தனது முன்ஜென்மம் பற்றி நினைவு வந்துள்ளது அதிசயத்தை ஏற்படுத்தியுள்ளது.

பூனம் என்ற அந்த சிறுமிக்கு தற்போது 14 வயதாகிறது. முற்பிறவியில் தான் யாருடைய மகளாக பிறந்தேன் என்றும் யாருடன் தனக்கு திருமணம் நடந்தது என்றும் தற்போது நினைவு கூர்கிறார் அந்த சிறுமி. அதுமட்டுமல்லாது தன்னுடைய மரணம் எப்போது எப்படி நிகழ்ந்தது என்று கூறி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளார். முன்ஜென்மத்தில் தன்னுடன் வாழ்ந்தவர்களை தேடிச் சென்று சந்தித்து பேசினார் பூனம். இதைக்கேட்டு சிறுமியின் பெற்றோர்களும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

மறுபிறவி பற்றிய கதைகள் பற்றி திரைப்படங்கள் எடுக்கப்பட்டாலும், மறுபிறவி என்பது உண்மைதான் என்று பல ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் நடைபெற்ற ஆய்வில் நிரூபிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் 1926ம் ஆண்டு பிறந்த சாந்தி தேவி என்பவர் 4 வயது குழந்தையாக இருந்தபோது, தான் மறுபிறவி எடுத்துள்ளதாக, தன்னுடைய பழைய நினைவுகளை கூற ஆரம்பித்து அனைவருக்கும் ஆச்சரியம் அளித்தார்.ஒரு 4 வயது குழந்தையால் எவ்வாறு இது போன்று கூற முடிகிறது என்று குழப்பம் அடைந்த மகாத்மா காந்தி, இது தொடர்பாக விசாரிக்க ஒரு குழுவை நியமித்தார். இது தொடர்பான விசாரணை அறிக்கை 1936ம் ஆண்டு வெளியானது.

தனது பெற்றோர்களிடம், தன்னுடைய உண்மையான வீடு மதுராவில் இருப்பதாகவும், அங்கு தன் கணவனுடன் வாழ்ந்து கொண்டிருந்தாகவும், தற்போது டெல்லியில் உள்ள இடத்தில் இருந்து 145 கி.மீ தொலைவில் அந்த வீடு உள்ளதாகவும் கூறியுள்ளார்.

இதையெல்லாம் பெற்றோர்கள் கண்டுகொள்ளாத காரணத்தால் அவர் தனது 6வது வயதில் வீட்டை விட்டு வெளியேறி, தன் கணவனை தேடி மதுரா செல்ல முயன்று பின்னர் வீடு திரும்பினார்.

{ventuno}

பள்ளியில் இது தொடர்பாக அவளின் ஆசிரியர் மற்றும் தலைமையாசிரியர் அவளிடம் விசாரிக்கையில், தனக்கு திருமணம் ஆகி விட்டதாகவும், குழந்தை பிறந்து 10 நாட்களில் தான் இறந்து விட்டதாகவும் கூறியுள்ளார்.

தனது கணவர் ஒரு வணிகர் என்றும், அவர் பெயர் கேதார் நாத் எனவும் குறிப்பிட்டுள்ளார். இதனை கேட்ட தலைமையாசிரியர் அதிர்ச்சியடைந்தார். ஏனெனில் அவருக்கு மதுராவில் கேதார் நாத் என்ற வணிகர் தெரியும். அவரது மனைவியும் 9 வருடங்களுக்கு முன் குழந்தையை பெற்று 10 நாட்களில் இறந்துள்ளார். அவரது பெயர் லுக்டி தேவி.

கேதார் நாத் டெல்லி வந்தபோது, அவரையும், அவரது குழந்தையும் எளிதாக அடையாளம் கண்டுள்ளார் சாந்தி தேவி. இது கேதார் நாத்திற்கு ஆச்சரியத்தை அளித்தது. அதுமட்டுமல்லாது லுக்டி தேவியின் பல தகவல்களை கூறி அனைவரையும் வியப்பில் ஆழ்தியுள்ளார் சாந்தி தேவி. இதனை கேட்ட கேதார் நாத், சாந்தி தேவி, லுக்டி தேவியின் மறுபிறவி தான் என்று அடித்துக் கூறினார்.

இதை பற்றி அறிந்த மகாத்மா காந்தி அந்த குழந்தையை நேரில் சென்று சந்தித்து, இது தொடர்பான விசாரணையில் இறங்கினார். அவர் அமைத்த விசாரணை குழு, சாந்தி தேவியை அழைத்து கொண்டு 1935ம் ஆண்டு மதுரா புறப்பட்டது. அப்போது தனது பக்கத்து வீட்டு மனிதர்களை அடையாளம் கண்ட சாந்தி தேவி, லுக்டி தேவியின் தாத்தாவையும் அடையாளம் கண்டார்.

லுக்டி தேவி மரணப்படுக்கையில் இருந்தபோது கொடுத்த வாக்குறுதி அனைத்தையும் கேதார் நாத் புறக்கணித்தையும் கூறி ஆச்சரியத்தில் மூழ்கடித்துள்ளார். பின்னர் அந்த சிறுமி தனது பெற்றோர்களுடன் வீட்டுக்கு திரும்பினார்.

லுக்டி தேவியின் மறுபிறவியே சாந்தி தேவி என்று கூறி தனது விசாரணையை முடித்தது. சாந்தி தேவி அதன் பிறகு திருமணம் செய்து கொள்ளவில்லை. அவர் 1987ம் ஆண்டு 27, டிசம்பர் அன்று இறந்தார்.

இந்த சம்பவம் போலவே தற்போது ராஜஸ்தானில் வசிக்கும் சிறுமியும் தனது முன்ஜென்மத்தை நினைவு கூர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+