நடுவானில் ஜெட்ஏர்வேஸ் விமானத்தில் பரபரப்பு.. 30 பயணிகளின் காது, மூக்கிலிருந்து ரத்தம் கொட்டியது!
ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் பயணித்த பல பயணிகளுக்கு திடீர் என்று ஒரே சமயத்தில் உடல் நலக்குறைவு ஏற்பட்ட காரணத்தால் விமானம் பாதியில் தரையிறக்கப்பட்டு இருக்கிறது.
Recommended Video

மும்பை: ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் பயணித்த பல பயணிகளுக்கு திடீர் என்று ஒரே சமயத்தில் உடல் நலக்குறைவு ஏற்பட்ட காரணத்தால் விமானம் பாதியில் தரையிறக்கப்பட்டு இருக்கிறது.
சில நாட்களுக்கு முன் டெல்லியில் இருந்து நியூயார்க் சென்ற ஏர்இந்தியா விமானத்தில் பெரிய பரபரப்பு ஏற்பட்டது. அந்த விமானத்தில் பல முக்கிய பாகங்கள் சரியாக வேலை செய்யாத காரணத்தால் தரையிறக்கப்பட முடியாமல் சிரமம் ஏற்பட்டது.
இந்த நிலையில் தற்போது ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் பிரச்சனை ஏற்பட்டு இருக்கிறது. உள்ளே இருந்த பயணிகள் எல்லோருக்கும் உடல்நல குறைவு ஏற்பட்டுள்ளது.

என்ன விமானம்
இது ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஆகும். மும்பையில் இருந்து ஜெய்ப்பூர் நோக்கி இந்த விமானம் சென்றுள்ளது. இன்று காலை இந்த சம்பவம் நடந்துள்ளது. இதில் மொத்தம் 170 பேர் பயணம் செய்து இருக்கிறார்கள். இதில் 30 பயணிகளுக்கு இப்படி உடல் நல குறைவு ஏற்பட்டுள்ளது.

என்ன நடந்தது
இவர்கள் எல்லோருக்கும் முதலில் தலைவலி ஏற்பட்டு இருக்கிறது. அதன்பின் இவர்கள் வாந்தி எடுத்து இருக்கிறார்கள். சில நேரத்தில் சிலருக்கு ரத்தம் வந்துள்ளது. மூக்கு மற்றும் காதுகளில் ரத்தம் வந்துள்ளது. அதன்பின் ஒவ்வொருவராக சிலருக்கு மூக்கு மற்றும் காதுகளில் இருந்து ரத்தம் வந்து இருக்கிறது. மொத்தமாக 30 பேருக்கு இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

என்ன காரணம்
விமானம் மேலே பறக்க பறக்க அதற்கு உட்புறம் உள்ள காற்று அழுத்தமும், வெளியே இருக்கும் அழுத்தமும் மாறிக்கொண்டே வரும். இதை சரியாக சமநிலைப்படுத்தி இயல்பில் வைத்திருக்க வேண்டும். ஆனால், இந்த அழுத்த மாற்றத்தை சரி செய்யாமல் போய் இருக்கிறார்கள் விமான பணியாளர்கள். இதனால் இந்த பாதிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இறக்கப்பட்டது
இந்த நிலையில் இந்த விமானம் இன்று வெகுவேகமாக மும்பையில் மீண்டும் தரையிறக்கப்பட்டது. பயணிகள் எல்லோரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து விசாரணையும் நடந்து வருகிறது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications