பிரதமர் மோடியை திருமணம் செய்வேன்.... சபதம் ஏற்று டெல்லியில் போராடும் பெண்மணி !
பிரதமர் மோடியை நான் கண்டிப்பாக திருமணம் செய்வேன் என டெல்லி ஜந்தர் மந்தரில் பெண் ஒருவர் போராட்டம் நடத்தி வருகிறார்.
டெல்லி : பிரதமர் மோடியை நான் கண்டிப்பாக விரைவில் திருமணம் செய்வேன் என டெல்லி ஜந்தர் மந்தரில் பெண் ஒருவர் போராட்டம் நடத்தி வருகிறார். கடந்த ஒரு மாதமாக போராடி வரும் இவர் தனது கையில் பிரதமர் மோடியின் புகைப் படத்தையும் , "நான் மோடியைத் திருமணம் செய்வேன் " என்ற வாசகம் அடங்கிய பதாகையையும் வைத்துள்ளார்.
போராட்டங்களுக்கு பெயர் போன டெல்லியின் ஜந்தர் மந்தர் பகுதியில் கடந்த மாதம் 8-ம் தேதி போராட்டத்தை தொடங்கிய ராஜஸ்தானை சேர்ந்த இந்தப் பெண்ணின் பெயர் ஓம் சாந்தி சர்மா ஆகும்.

மோடியை மணப்பேன்
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரை சேர்ந்தவர் ஓம் சாந்தி சர்மா. 40 வயது நிரம்பிய இவர் கடந்த ஒரு மாதமாக ஒரு வித்தியாசமான கோரிக்கையுடன் ஜந்தர் மந்தரில் போராடி வருகிறார். அவரது போராட்டத்திற்கு காரணமாக அவர் கூறுவது இந்திய முழுக்க உள்ள மக்களையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது. அவர் " திருமணம் செய்தால் பிரதமர் மோடியைதான் திருமணம் செய்வேன், எனக்கு அவருடன் சேர்ந்து வாழ விருப்பம் , அதற்காகவே நான் இங்கு போராடி வருகிறேன் " என்று அவனைவரிடமும் கூறி வருகிறார். இது பலரது கவனத்தை அவரது பக்கம் திருப்பி உள்ளது.

அடுத்த திருமணம்
மோடியை மணக்க சபதம் ஏற்று இருக்கும் இந்தப் பெண்மணி ஏற்கனவே திருமணம் ஆனவர். இவருக்கு 20 வயதில் மகள் ஒருவர் இருக்கிறார். இப்போது இந்த ஓம் சாந்தி சர்மா கணவனை பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறார். " பிரதமர் மோடியும் மனைவியைப் பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறார், அதே போல் நானும் வாழ்ந்து வருகிறேன் . எனவே பிரதமர் மோடியை நான் திருமணம் செய்வதில் எந்தத் தவறும் இல்லை. என்னை திருமணம் செய்துகொள்ள பலரும் விருப்பம் தெரிவித்து வருகின்றனர் . ஆனால் எனக்கு பிரதமர் மோடியை திருமணம் செய்ய மட்டுமே விருப்பம் " என்று கூறியுள்ளார்

சேவை செய்ய விருப்பம்
மோடியை ஏன் திருமணம் செய்ய நினைக்கிறீர்கள் என்ற கேள்விக்கு " எனக்கு பிரதமர் மோடியின் பணமோ, புகழோ தேவை இல்லை. அவர் நாட்டு மக்கள் எல்லோருக்கும் சேவை செய்கிறார், எனவே அதற்கு கைமாறாக அவருக்கு நான் சேவை செய்ய விரும்புகிறேன். என்னை சிலர் பைத்தியம் என்று கூறுகிறார்கள் எனக்கு அதை குறித்தெல்லாம் கவலை இல்லை " என்கிறார்.

பரிசு கொடுக்க ரெடி
இதேபோல் பிரதமர் மோடியின் மீதுள்ள அதீத அன்பை வெளிப்படுத்த பரிசு கொடுக்கும் திட்டம் ஒன்றிலும் இவர் இருக்கிறார். இதுகுறித்து அவர் கூறிய பொது " எனக்கு சொந்தமாக ஜெய்ப்பூரில் கொஞ்சம் நிலமும், பணமும் இருக்கிறது . அதை வைத்து பிரதமர் மோடிக்கு நல்ல பரிசு ஒன்று வாங்கித் தரலாம் என்று இருக்கிறேன் ' என கூறியுள்ளார்.
ஜந்தர் மந்தரில் யாரும் போராடக் கூடாது என பசுமைத் தீர்ப்பாயம் கூறியுள்ளதால் இவர் சீக்கிரமே அங்கிருந்து வெளியேற்றப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications