கணவன் முன்னே மனைவி பாலியல் பலாத்காரம்.. கடனை திருப்பி தராததால் கட்டாய திருமணம்! குஜராத்தில் ஷாக்
காந்திநகர்: குஜராத்தில் ரூ.50 ஆயிரம் கடன் திருப்பி செலுத்தப்படாததால் பெண் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத்தின் அகமதாபாத்தில் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் அவரது மனைவி பொருளாதார நெருக்கடி காரணமாக சாவ்தா எனும் நபரிடத்தில் ரூ.50 ஆயிரம் கடன் பெற்றிருக்கிறார்.
ஆனால் இவரால் குறிப்பிட்ட காலத்தில் இந்த தொகையை திருப்பி செலுத்த முடியவில்லை. இது குறித்து சாவ்தா வீடு தேடி வந்து மிரட்டிவிட்டு சென்றிருக்கிறார்.

ரூ.50 ஆயிரம் கடன்
அப்படி இருந்தும் பணத்தை திரும்ப செலுத்த முடியவில்லை. இவ்வாறு இருக்கையில், திடீரென ஒருநாள் ஆட்டோ ஓட்டுநரின் மனைவி தனியாக வீட்டில் இருக்கும்போது அதிரடியாக வந்த சாவ்தா அப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார். மட்டுமல்லாது இந்த சம்பவத்தை வீடியோவாகவும் பதிவு செய்துள்ளார். இந்த சம்பவம் குறித்து அறிந்த ஆட்டோ ஓட்டுநர் இந்த வீடியோவை வெளியிட வேண்டாம் என்றும், தான் அப்பணத்தை திருப்பி தந்துவிடுவதாகவும் கூறியுள்ளார். ஆனால் கொடுத்த ரூ.50 ஆயிரத்திற்கு தினமும் ரூ.1,500 வட்டியாக கொடுக்க வேண்டும் என்றும் தவறினால் வீடியோ வெளியிடப்படும் எனவும் சாவ்தா மிரட்டியுள்ளார். இருப்பினும் துர்திஷ்டவசமாக இந்த பணத்தை ஆட்டோ ஓட்டுநரால் கொடுக்க முடியவில்லை.

காவல்துறை
இந்நிலையில் ஒரு வாரம் கழித்து மீண்டும் வந்த சாவ்தா, ஆட்டோ ஓட்டுநர் வீட்டில் இருக்கும் போதே அவரது மனைவியை பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார். இது தொடர்கதையாகியுள்ளது. ஆட்டோ ஓட்டுநரும் எங்கெல்லாம் தேடியலைந்தும் பணத்தை ஏற்பாடு செய்ய முடியவில்லை. இதனால் சாவ்தா அடிக்கடி வந்த சென்றிருக்கிறார். இதனால் மனமுடைந்த அப்பெண் காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்றுள்ளார். ஆனால் காவலர்கள் இப்புகாரை ஏற்றுக்கொள்ளவில்லை. இவர் எவ்வளவோ எடுத்து சொல்லியும் காவல்துறையினர் புகாரை பெற்றுக்கொள்ளவில்லை.

கடத்தல்
மட்டுமல்லாது இப்பெண்ணை தரக்குறைவாக பேசி அனுப்பியுள்ளனர். இதனால் அவர் விரக்தியின் எல்லைக்கு சென்றுள்ளார். இதனையடுத்து நண்பர்களின் உதவியுடன் நீதிமன்றத்தை நாடி இருக்கிறார். வழக்கை விசாரித்த நீதிமன்றம் சாவ்தா மீது வழக்குப்பதிவு செய்யுமாறு உத்தரவிட்டது. இதனையடுத்து சாவ்தா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஆனால் சாவ்தா அதற்குள் தலைமறைவாகிவிட்டார். பின்னர் மீண்டும் திடீரென அவர் ஆட்டோ ஓட்டுநரின் வீட்டுக்கு சென்று அவரின் மனைவியை வலுக்கட்டாயமாக கோயிலுக்கு கடத்தி சென்றுள்ளார்.

திருமணம்
அங்கு வைத்து அப்பெண்ணின் நெற்றியில் குங்குமமிட்டு தான் இவரை திருமணம் செய்து கொண்டாக கூறி இனி அப்பணத்தை தர வேண்டாம் என்று கூறியுள்ளார். இதை சற்றும் எதிர்பாராத அப்பெண் இதற்கு மறுப்பு தெரிவிக்கவே சாவ்தாவுடன் வந்தவர்கள் அவர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் அப்பெண்ணின் கையில் அரிவாள் வெட்டு விழுந்துள்ளது. சம்பவம் பெரியதாக வெடித்த நிலையில் காவல்துறையினர் உடனடியாக சாவ்தாவை கைது செய்துள்ளனர். வெறும் ரூ.50 ஆயிரம் பணத்திற்காக இளம் பெண் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications