Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அதிகரிக்கும் அபிராமிகள்: கள்ளக்காதலனுடன் சேர்ந்து 4 வயது குழந்தைக்கு உடல் முழுவதும் சூடு போட்ட தாய்

ஹைதராபாத்தில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து பெற்ற தாயே தனது 4 வயது பெண் குழந்தைக்கு உடல் முழுவதும் சூடுபோட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: கள்ளக்காதலனுடன் சேர்ந்து பெற்ற தாயே தனது 4 வயது பெண் குழந்தைக்கு உடல் முழுவதும் சூடுபோட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் மாலக்பெட் பகுதியை சேர்ந்தவர் 25 வயதான சரிதா. இவருக்கு திருமணமாகி 4 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.

இந்நிலையில் சரிதாவுக்கு அதே பகுதியை சேர்ந்த வெங்கட் ரெட்டி என்பவருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இதனை அறிந்த சரிதாவின் கணவர் அவரை கண்டித்துள்ளார்.

கள்ளக்காதலன்

கள்ளக்காதலன்

ஆனால் அதனை கொஞ்சமும் காதில் போட்டுக்கொள்ளாத சரிதா கணவர் வேலைக்கு சென்ற பிறகு கள்ளக்காதலன் வெங்கட் ரெட்டியை வீட்டுக்கு வரவழைப்பதும், அவருடன் ஊர் சுற்றுவதுமாக இருந்துள்ளார்.

கள்ளக்காதலனுடன் ஓட்டம்

கள்ளக்காதலனுடன் ஓட்டம்

இதனால் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த சரிதா கடந்த 15 நாட்களுக்கு முன்னதாக தன்னுடைய கணவரை பிரிந்து கள்ளக்காதலன் வெங்கட் ரெட்டியுடன் சென்றுவிட்டார்.

கணவரை பழிவாங்க

கணவரை பழிவாங்க

கடந்த 15 நாட்களாக அவருடன்தான் சேர்ந்து வாழ்ந்து வருகிறார். இந்த நிலையில் கடந்த திங்கட்கிழமையன்று சரிதா தன்னுடைய கணவருடன் நடந்த சண்டைக்கு பழிக்கு பழி வாங்க 4 வயது மகளை பயன்படுத்தியுள்ளார்.

துடிக்க துடிக்க சூடு

துடிக்க துடிக்க சூடு

தாயும் அவருடைய கள்ளக்காதலனும் சேர்ந்து அடிக்கடி பெண் குழந்தை என்றும் பாராமல் சிறுமியை சரமாரியாக அடித்து துன்புறுத்தியுள்ளனர். குழந்தையின் உடல் முழுவதும் அவர்கள் துடிக்க துடிக்க சூடு போட்டுள்ளனர்.

கள்ளக்காதலனுடன் கைது

கள்ளக்காதலனுடன் கைது

இதனை அறிந்த பக்கத்து வீட்டார் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சரிதா மற்றும் அவருடைய கள்ளக்காதலனை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

சிறுமி வாக்குமூலம்

சிறுமி வாக்குமூலம்

இதற்கிடையில் உடல்முழுவதும் காயமடைந்த சிறுமியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை முடிந்ததும், சிறுமியிடம் வீடியோ மூலம் வாக்குமூலம் ஒன்று பெறப்பட்டது.

பின்பக்கத்தில் சூடு

பின்பக்கத்தில் சூடு

அதில், முதலில் அப்பாதான் என்னை அடித்தார். பின்பு கரண்டியை அம்மா சூடு பண்ணி கொடுத்ததும், அதை வைத்து என்னுடைய பின் பக்கத்தில் சூடு போட்டார் என கூறியுள்ளார்.

கள்ளக்காதலனுடன் சேர்ந்து

கள்ளக்காதலனுடன் சேர்ந்து

இந்த சம்பவத்தில் சிறுமியின் கை, கால்களின் பாதங்கள் மற்றும் உடல் பகுதியில் ஏராளமான தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். கணவரை பழிவாங்க கள்ளக்காதலனுடன் சேர்ந்து பெற்ற தாயே குழந்தைக்கு உடல் முழுவதும் சூடு போட்டு துன்புறுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குழந்தைகளை கொன்ற அபிராமி

குழந்தைகளை கொன்ற அபிராமி

அண்மையில் சென்னையை அடுத்த குன்றத்தூரில் அபிராமி என்ற பெண் கள்ளக்காதலனுடன் ஓட்டம்பிடிக்க தான் பெற்ற இரண்டு குழந்தைகளையும் துள்ள துடிக்க கொலை செய்தார். தற்போது இதேபோன்ற சம்பவம் ஹைதராபாத்திலும் அரங்கேறியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+