For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஹுட்ஹுட்டால் உருக்குலைந்த ஆந்திரா

By Veera Kumar
Google Oneindia Tamil News

ஹைதராபாத்: ஹுட் ஹுட் புயலால் உருக்குலைந்து கிடக்கிறது ஆந்திரா. புயலுக்கு பிறகு அமைதி என்பார்கள். புயலுக்கு பிறகு அங்கு சத்தம் எழுப்ப யாருமே இல்லை என்பதும் ஒரு இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். புயலுக்கு பிறகு ஆந்திராவின் நிலை எப்படி உள்ளது என்பது குறித்த ஒரு புகைப்பட தொகுப்பு இதோ..

ரயில் தப்பியது

ரயில் தப்பியது

மழை வெள்ளத்தால் அரித்து சென்ற மணலுக்கு மேலே, தடுமாறியபடி நிற்கும் தண்டவாளம்.

தலைக்கு மேல் ஆபத்து

தலைக்கு மேல் ஆபத்து

காற்று, வெள்ளத்தால் அந்தரத்தில் தொங்கியபடி நிற்கும் மின் கம்பம். நல்லவேளையாக மின்சார சப்ளை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் மக்கள் தப்பித்தனர்.

ஆபீஸ் எங்க போச்சி

ஆபீஸ் எங்க போச்சி

இங்கே ஒரு ஆபீஸ் இருந்திச்சே.. அது எங்கே போனது என்று கேட்கும் நிலைக்கு தள்ளப்பட்டது விசாகபட்டிணத்திலுள்ள ஒரு தனியார் அலுவலகம்.

காவல்துறை உங்கள் நண்பன்

காவல்துறை உங்கள் நண்பன்

ஆபத்தான நிலையில் உடைந்து காணப்படும் மரத்தை வெட்டி அகற்றுகிறார் இந்த போலீஸ்காரர். ஆள் பற்றாக்குறையால் லத்தி எடுக்க வேண்டிய கைகள் ஆயுதத்தை எடுத்துள்ளன.

ஆத்தாடி..

ஆத்தாடி..

நீண்ட இந்த மரத்தையே வேரோடு சாய்த்துள்ளது என்றால் ஹுட்ஹுட் வலிமையை தெரிந்துகொள்ள முடிகிறது.

தலையை சாய்த்துவிட்டதே

தலையை சாய்த்துவிட்டதே

குலை தள்ள வேண்டிய வாழையை புயல் இப்படி தலை தள்ளிவிட்டதே என்ற சோகம் ராஜமுந்திரி விவசாயிகளிடம் உள்ளது.

தென்னைக்கே இதுதான் கதி

தென்னைக்கே இதுதான் கதி

வாழை என்னங்க, எங்க ஊர்ல தென்னை மரமே வீசி எறியப்பட்டுள்ளது என்று ஆதங்கப்படுகிறார்கள் ஸ்ரீகாகுளம் விவசாயிகள்.

வெள்ளத்தில் வாழ்க்கை

வெள்ளத்தில் வாழ்க்கை

முட்டி அளவுக்கும் மேல் ஓடும் வெள்ளத்தோடு போராடி வாழ்க்கை நடத்தும் ஸ்ரீகாகுளம் மாவட்ட மக்கள்.

என்னா கியூ

என்னா கியூ

பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருள் கடைகள் மூடப்பட்டுள்ள நிலையில் திறந்திருந்த ஒரு பெட்ரோல் பங்கில் நீ....ண்ட கியூவில் நின்று பெட்ரோல் போடும் வாகன ஓட்டிகளின் அவல நிலை.

முதல்வர் ஆலோசனை

முதல்வர் ஆலோசனை

புயல் சேதத்தை தடுக்க எடுக்க வேண்டிய போர்க்கால நடவடிக்கைகள் குறித்து உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு.

English summary
A photo gallery of Andhra Pradesh which hit by Cyclone. You can see the effect and the power of Hudhud Cyclone through these pictures.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X