Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

12,756 அடி உயரத்தில் பனி லிங்கம்.. அமர்நாத் யாத்திரை தொடங்கியது! லட்சக்கணக்கான பக்தர்கள் முன்பதிவு

Subscribe to Oneindia Tamil

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரில் பிரசித்தி பெற்ற அமா்நாத் குகைக் கோயிலுக்கான புனித யாத்திரை இன்று தொடங்கியுள்ளது. இன்று முதல் 52 நாட்கள் வரை யாத்தரை நடைபெறுவதால் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது.

தெற்கு காஷ்மீரில் இமயமலையில் 3,880 மீ உயரத்தில் அமைந்துள்ள அமா்நாத் குகைக் கோயிலில் உருவாகும் பனிலிங்கத்தை தரிசிக்க ஒவ்வோா் ஆண்டும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அமர்நாத் யாத்திரையை மேற்கொள்கின்றனர். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான பயணம் இன்று முதல் தொடங்கியுள்ளது. இன்று தொடங்கி சுமார் 52 நாட்கள் வரை இந்த யாத்திரை நடைபெறும்.

Amarnath Yatra Jammu and Kashmir

இன்று சுமார் 4603 பக்தர்களை கொண்ட முதல் பயணக்குழு, காஷ்மீரில் உள்ள அடிவார முகாம்களுக்கு வந்திருக்கின்றனர். அமர்நாத் குகைக்கு இரண்டு வழியாக பக்தர்கள் பயணம் மேற்கொள்வார்கள். அதாவது வடக்கு காஷ்மீரின் பால்டால் வழியாகவும், தெற்கு காஷ்மீரின் பஹல்காம் வழியாகவும் பயணிகள் அமர்நாத் குகையை அடைவார்கள்.

ஜம்மு மாவட்டத்தின் பகவதி நகரில் உள்ள யாத்ரி நிவாஸ் முகாமில் இருந்து 4,603 பக்தா்களைக் கொண்ட முதல் குழுவினா், காஷ்மீரின் இரு அடிவார முகாம்களுக்கு வெள்ளிக்கிழமை பலத்த பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டனா். இவா்கள் பயணித்த வாகனங்களை, யூனியன் பிரதேச துணைநிலை ஆளுநா் மனோஜ் சின்ஹா கொடியசைத்து அனுப்பிவைத்தாா்.

அமர்நாத் குகை ஜம்மு காஷ்மீரில் இருப்பதால் இந்த குகைக்கு செல்லும் பக்தர்கள் மீது தீவிரவாத தாக்குதல்கள் நடத்தப்பட வாய்ப்பு இருக்கிறது. எனவே இந்த முறை பக்தர்களுக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது. அதேபோல சோதனை சாவடிகள் அமைத்து வாகனங்கள் சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகின்றன. இந்த ஆண்டு சுமார் 3.5 லட்சம் பக்தர்கள் புனித பயணத்திற்காக முன்பதிவு செய்திருக்கின்றனர்.

அமர்நாத் குகைக்கு செல்லும் வழிகளில் பக்தர்களின் உணவு தேவையை பூர்த்தி செய்ய சுமார் 125 சமையல் கூடங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. பக்தர்களுக்கு உதவ சுமார் 6,000 தன்னார்வலர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அமர்நாத் குகை அமைந்துள்ள பகுதி கடல் மட்டத்திலிருந்து 12,756 அடி உயரத்தில் அமைந்திருப்பதால் இயல்பாகவே இந்த இடம் கடும் இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட வாய்ப்புள்ள இடமாக இருக்கிறது. எனவே ஆண்டின் குறிப்பிட்ட நாட்களில் மட்டுமே இங்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.

இன்று தொடங்கும் அமர்நாத் யாத்திரை பயணமானது 52 நாட்களுக்கு பிறகு ஆகஸ்ட் மாதம் 19ம் தேதியன்று நிறைவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+