21 குழந்தைகளுக்குப் பாலியல் வன்கொடுமை.. பள்ளி வார்டனுக்கு தூக்குத் தண்டனை விதித்த நீதிமன்றம்
இட்டாநகர்: அருணாச்சலப் பிரதேசத்தில் அரசு உறைவிடப் பள்ளியில் ஆறு மாணவர்கள் உட்பட மாணவிகள் 21 பேரை விடுதி வார்டன் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலையை ஏற்படுத்திய வழக்கில், வார்டனுக்கு தூக்குத் தண்டனை விதித்து போக்சோ நீதிமன்றம் சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.
நாட்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. குறிப்பாக பெண் குழந்தைகளுக்கான எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்துள்ளன. மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தா ஆர்ஜி கார் மருத்துவமனையில் பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த தீர்ப்பு வெளியாகியுள்ளது.

அருணாச்சலப் பிரதேசம், சியோமி மாவட்டத்தில் உள்ள அரசு உறைவிடப் பள்ளி விடுதியில் 2019 முதல் 2022 ஆம் ஆண்டு வரை வார்டனாக இருந்த யும்கேன் பக்ரா மற்றும் ஹிந்தி ஆரியர் மார்பும் கோம்திர், முன்னாள் தலைமை ஆசிரியர் ஆகியோர் 15 மாணவிகள் மற்றும் 6 மாணவர்களை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். நாட்டை உலுக்கிய இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பள்ளிச் சிறுமிகள் தங்களுக்கு ஏற்பட்ட இந்த கொடூர சம்பவம் குறித்து பள்ளித் தலைமை ஆசிரியரிடம் புகார் தெரிவித்துள்ளனர்.
ஆனால் இந்தப் புகார் குறித்து தெரிந்தும் பள்ளித் தலைமை ஆசிரியர் காவல் துறை அதிகாரிகளிடம் தெரிவிக்காமலும், நடவடிக்கை எடுக்கப்படாமலும் இருந்துள்ளார். இந்த விவகாரம் குறித்து வெளியில் தெரிந்தால் பள்ளியின் பெயர் கெட்டுவிடும் என்று கருதி மறைத்து வைத்துள்ளார். இந்த நிலையில், கடந்த 2022 ஆம் ஆண்டு தனது 12 வயது இரட்டைக் குழந்தைகளை விடுதியில் பெற்றோர் சேர்த்த நிலையில், தனது குழந்தைகளை வார்டன் பாலியல் வன்கொடுமை செய்ததாக தாய் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதையடுத்து, இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்தது. புகார் குறித்து விசாரிக்க சிறப்பு தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினர் கடந்த வருடம் குற்றப் பத்திரிக்கையை சமர்ப்பித்தனர். அதில், மாணவிகளுக்கு போதை மருந்து கலந்துகொடுத்து அவர்களை வார்டன் வன்கொடுமை செய்திருப்பது தெரியவந்துள்ளது. மேலும், இந்த விவகாரம் குறித்து மாணவிகள் வெளியில் சொல்லாமல் இருக்க அடித்து துன்புறுத்தியுள்ளதும் தெரியவந்துள்ளது.
வார்டனால் பாதிக்கப்பட்ட 6 மாணவிகள் தற்கொலைக்கு முயன்ற நிலையில் மீட்கப்பட்டதும் விசாரணையில் அதிர்ச்சி தகவல் வெளியாகியிருந்தது. இந்த வழக்கில் குற்றத்தை மறைத்ததற்காக பள்ளியின் முன்னாள் தலைமை ஆசிரியர் மற்றும் வார்டன் உள்பட 3 பேரை நீதிமன்றம் குற்றவாளியாக அறிவித்துள்ளது. மேலும், வார்டன் யும்கேன் பக்ராவிற்கு தூக்குத் தண்டனை விதித்தும் உத்தரவிடப்பட்டுள்ளது. தொடர்ந்து, முன்னாள் தலைமை ஆசிரியர் மற்றும் ஹிந்தி ஆசிரியருக்கு இருபது ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளன.
மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் கடந்த ஆண்டு ஏழு வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் அந்தக் குற்றவாளிக்கு போக்சோ நீதிமன்றம் தூக்குத் தண்டனை விதித்து கடந்த வியாழக்கிழமை தீர்ப்பளித்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications