Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பெங்களூரில் கல்லூரி மாணவியை 10 நாட்களாக ஹோட்டலில் அடைத்து பலாத்காரம் செய்த 4 பேர் கைது!

பெங்களூரில் காணாமல் போன இளம்வயது பெண் 10 நாட்களாக ஒரே அறையில் அடைத்து வைக்கப்பட்டு இருந்தது விசாரணையில் தெரிய வந்து இருக்கிறது.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    பெங்களூரில் கல்லூரி மாணவியை 10 நாட்களாக பலாத்காரம் செய்த 4 பேர்- வீடியோ

    பெங்களூர்: மூன்று வாரங்களுக்கு முன் பெங்களூரை சேர்ந்த இளம்வயது பெண் ஒருவர் கல்லூரியில் இருந்து திரும்பி வரும் வழியில் காணமல் போனார். இந்த பெண்ணை இரண்டு வாரமாக போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.

    இந்த நிலையில் அந்த பெண் அங்கிருந்த ஒரு ஹோட்டல் அறையில் அடைத்து வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்ப்பட்டு இருக்கிறது. மேலும் பத்து நாட்களாக அவர் மிகவும் மோசமான வகையில் கொடுமை படுத்தப்பட்டு இருக்கிறார்.

    தற்போது போலீசார் இந்த செயலை செய்த நபர்களை கைது செய்து இருக்கின்றனர். இதற்காக அவர்கள் கடந்த ஒருமாதமாக மோசமாக திட்டம் தீட்டியது அம்பலம் ஆகியுள்ளது. இவர்

     போலீசில் புகார்

    போலீசில் புகார்

    பெங்களூரை சேர்ந்த ஒரு கல்லூரி மாணவி, கல்லூரிக்கு சென்ற பிறகு மாலை வீடு திரும்பாமல் இருந்திருக்கிறார். எனவே மறுநாள் காலை அந்த பெண்ணின் தந்தை போலீசுக்கு புகார் அளித்து இருக்கிறார். ஆனால் பெண் காணாமல் போய் இரண்டு வாரமாகியும் போலீசுக்கு எந்த துப்பும் கிடைக்கவில்லை. மேலும் பணம் கேட்டும் யாரும் கால் செய்யவில்லை.

     10 நாட்களாக சிறை பிடிப்பு

    10 நாட்களாக சிறை பிடிப்பு

    பெண் காணாமல் போன செய்தி பத்திரிக்கைகளில் வந்ததை அடுத்து போலீசுக்கு பெரிய பிரச்சனை ஆனது. இதையடுத்து போலீசார் தனிப்படை அமைத்து அந்த பெண்ணை தேடினர். அதன்படி அந்த பெண்ணின் கல்லூரிக்கு அருகில் இருக்கும் ஹோட்டல் அறை ஒன்றில் அந்த பெண் கட்டி வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் இந்த பெண்ணை நான்கு நபர்கள் சேர்ந்து கொடுமை படுத்தியதும் கண்டுபிடிக்கப்பட்டது.

     நபருக்கும் தொடர்பு

    நபருக்கும் தொடர்பு

    போலீசார் ஒருவர் பின் ஒருவராக நான்கு பேரையும் கைது செய்தனர். இதில் கடத்தப்பட்ட அந்த பெண்ணின் நண்பர் ஒருவரும் கைது செய்யப்பட்டார். மேலும் அந்த நபர் அந்த பெண்ணின் கல்லூரிக்கு அருகில் டீ கடை வைத்து இருந்தவர் என்பது தெரிய வந்துள்ளது. இந்த பெண்ணை கடத்துவதற்காக பல நாட்களாக நண்பராக பழகி இருக்கிறார். இவர்தான் அந்த பெண்ணை ஹோட்டல் அறைக்கு பேசி அழைத்து வந்தார்.

     போலீஸ் வழக்கு

    போலீஸ் வழக்கு

    ஹோட்டல் அறையில் அடைக்கப்பட்டு இருந்த அந்த பெண் நான்கு பேராலும் வன்புணர்வு செய்யப்பட்டு இருக்கிறார். இந்த குற்றத்தில் 56 வயது நபர் ஒருவரும் ஈடுபட்டு இருக்கிறார். இந்த நிலையில் இந்த நான்கு பேரின் மீதும் குழந்தைக்களுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதற்கு எதிரான சட்டத்தின் கீழ் வழக்கு பதியப்பட்டு இருக்கிறது. அந்த பெண்ணுக்கு 18 வயது நிரம்பவில்லை என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+