‛திரு.திருடன் அவர்களே’.. சோஷியல் மீடியா போஸ்ட்டால் மீண்டும் கிடைத்த பைக்! திருடனின் நெகிழ்ச்சி செயல்
சூரத்: பைக்கை திருடி சென்ற மர்ம நபர், சில நாட்களுக்கு பிறகு மீண்டும் அதே இடத்தில் கொண்டு வந்து நிறுத்தி விட்டு சென்றுள்ள சம்பவம் குஜராத்தில் பேசுபொருளாகியுள்ளது.
குஜராத் மாநிலம் சூரத்தில், பரேஷ் படேல் எனும் இளைஞர் புதியதாக வாங்கிய தனது பைக்கை, வழக்கம் போல வீட்டிற்கு வெளியில் நிறுத்தி வைத்திருக்கின்றார். ஆனால் சில நாட்களுக்கு முன்னர், இரவு நேரத்தில் அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் இந்த பைக்கை லாவகமாக திருடி சென்றிருக்கிறார். பைக்கின் விலை சுமார் ரூ.1.5 லட்சம் வரை இருக்கும். பைக் திருடப்பட்டது சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. ஆனால் அந்த இளைஞர் இது குறித்து போலீஸில் புகார் ஏதும் கொடுக்கவில்லை. மாறாக, பைக்கை மீட்க மற்றொரு முயற்சியை கையாண்டார்.

அதாவது தனது பைக் திருடப்பட்டது குறித்து சோஷியல் மீடியாவில் உருக்கமாக பதிவிட்டார். "திரு.திருடன் அவர்களே, நீங்கள் என்னிடமிருந்த ஒரேயொரு பைக்கையும், அதிலிருந்த ஆர்.சி புக்கையும் எடுத்து சென்றுவிட்டீர்கள். எனக்கு இந்த பைக்கை தவிர ஓட்டுவதற்கு என ஒரேயொரு ஓட்டை சைக்கிள்தான் இருக்கிறது. பரவாயில்லை, இதை வைத்து என்னுடைய வேலையை என்னால் செய்துக்கொள்ள முடியும்" என்று எழுதி, அத்துடன் திருடப்பட்ட பைக்கின் போட்டோவையும் பதிவிட்டிருந்தார்.
நாட்கள் சென்றன. சரியாக 5 நாட்களுக்கு பின்னர், காலை பொழுதில் வீட்டின் வாசலுக்கு வந்து பார்த்தபோது திருடுபோன பைக் நின்றிருக்கிறது. பரேஷ் பட்டேலால் இந்த ஆச்சரியத்தை தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. பொதுவாக இப்படி பைக்கை திருடுபவர்கள், அதை குற்ற செயலுக்கு பயன்படுத்திவிட்டு, தனித்தனியாக பிரித்து விற்பனை செய்துவிடுவார்கள். இல்லையெனில் நம்பர் பிளேட்டை மாற்றி தங்களது தேவைகளுக்கு பயன்படுத்திக்கொள்வார்கள். ஆனால் அதிசயமாக பைக்கை திருடிய நபர், அதை பத்திரமாக கொண்டு வந்து சேர்த்திருக்கிறார்.
இது குறித்து பைக்கின் உரிமையாளரான படேல் கூறுகையில், "இந்த பைக்கை வாங்குவதற்கு நான் மிகவும் சிரமப்பட்டேன். எல்லா இளைஞர்களை போலவும் நானும் என்னுடைய பைக் மீது மிகவும் பிரியமாக இருந்தேன். ஆனால் ஒரு நாள் காலையில் அது காணாமல் போயிருந்தது. என்னால் இதை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. சிசிடிவி காட்சிகளை செக் செய்ததில் பைக் திருடப்பட்டிருப்பது கன்ஃபார்ம் ஆனது. இருந்தாலும் இது குறித்து போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளிக்காமல், வேறு வழியில் மீட்க வேண்டும் என்று விரும்பினேன்.
எனவே பைக்கை திருடிய நபருக்கு உருக்கமாக கடிதத்தை எழுதினேன். என்னுடைய மனதில் என்னெவல்லாம் தோன்றியதோ அதை அப்படியே எழுதினேன். முடிவில் அந்த அதிசயம் நிகழ்ந்தது. பைக் எனக்கு மீண்டும் கிடைத்துவிட்டது" என்று நெகிழ்ச்சியாக கூறியுள்ளார். இந்த சம்பவம் சூரத் மட்டுமின்றி குஜராத் முழுவதும் பேசு பொருளாகியுள்ளது.
-
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்! -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications